WTC Final : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் இந்திய நேரப்படி எத்தனை மணிக்கு? – எந்த சேனலில் பார்க்கலாம்?

IND-vs-AUS
- Advertisement -

இந்தியாவில் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வந்த 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இதனை அடுத்து கிரிக்கெட் ரசிகர்களின் பார்வை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலை நோக்கி நகர்ந்துள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெறயிருக்கும் மாபெரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

IND vs AUS

- Advertisement -

கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் லீக் போட்டிகள் நடைபெற்று வந்த வேளையில் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இந்த மாபெரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதியாகி உள்ளன.

வரும் ஜூன் 7-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற இருக்கும் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றும் என்பதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தை தொட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 2021-ஆம் ஆண்டு நியூசிலாந்து அணியிடம் கோப்பையை இழந்த இந்திய அணி இம்முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றியே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

iplstar

அதேவேளையில் ஆஸ்திரேலியா அணியும் முதல் முறையாக இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்ற காத்திருக்கிறது. இதன் காரணமாக இரு அணிகளுக்கும் இடையே பலமான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

- Advertisement -

இந்நிலையில் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியானது இந்திய நேரப்படி எத்தனை மணிக்கு தொடங்கும்? எந்த சேனலில் பார்க்கலாம்? என்பது குறித்த தெளிவான தகவலை நாங்கள் இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம். அதன்படி ஜூன் 7-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியானது இந்திய நேரப்படி தினமும் மதியம் (3pm) மணிக்கு துவங்கும். அதே போன்று முதல்நாள் டாஸ் (2.30pm)மணிக்கு போடப்படும்.

இதையும் படிங்க : ENG vs IRE : சச்சினின் சாதனையை உடைத்த ஜோ ரூட் – ஆல் டைம் உலக சாதனைக்கு குறி, இந்திய ரசிகர்கள் கலக்கம்

இந்த இறுதிப் போட்டியை ஒளிபரப்பும் உரிமத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழும நிறுவனம் கைப்பற்றியுள்ளதால் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் இந்த போட்டியை கண்டு களிக்கலாம். அதேபோன்று ஆன்லைன் வழியாக காண விரும்புவர் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஆப்பின் மூலம் இந்த போட்டியை கண்டுகளிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement