ENG vs IRE : சச்சினின் சாதனையை உடைத்த ஜோ ரூட் – ஆல் டைம் உலக சாதனைக்கு குறி, இந்திய ரசிகர்கள் கலக்கம்

Joe Root Sachin Tendulkar
- Advertisement -

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அங்கு 1 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. குறிப்பாக விரைவில் பரம எதிரி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக துவங்கும் ஆஷஸ் தொடருக்கு தயாராகும் வகையில் இந்த போட்டியில் இங்கிலாந்து களமிறங்கியுள்ளது. ஜூன் 1ஆம் தேதி லண்டனில் இருக்கும் உலக புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய அயர்லாந்துக்கு ஆரம்பம் முதலே சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து முதல் இன்னிங்ஸில் வெறும் 172 ரன்களுக்கு சுருண்டது.

அதிகபட்சமாக ஜேக் மெக்கோலம் 36 ரன்களும் குட்டீஸ் கேம்பர் 33 ரன்களும் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஸ்டூவர்ட் ப்ராட் 5 விக்கெட்களும் ஜேக் லீச் 3 விக்கெட்களும் எடுத்தனர். அதை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து கத்துக்குட்டியான அயர்லாந்து போல பவுலர்களை அதிரடியாக எடுத்துக்கொண்டு முதல் இன்னிங்ஸை 524/4 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது.

- Advertisement -

சச்சின் சாதனை உடையுமா:
குறிப்பாக ப்ரெண்ட் மெக்கல்லம் – பென் ஸ்டோக்ஸ் தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 ஆட்டத்தை வெளிப்படுத்தி கடந்த வருடம் இந்தியா, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகளை அடித்து நொறுக்கி வெற்றி வாகை சூடிய அதே ஸ்டைலை இந்த போட்டியிலும் இங்கிலாந்து தொடர்ந்தது. அந்த ஸ்டைலில் 109 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த அணியின் ஓப்பனிங் ஜோடியில் ஜேக் கிராவ்லி 56 (45) ரன்களும் பென் டன்கட் சதமடித்து 24 பவுண்டரி 1 சிக்ஸருடன் 182 (178) ரன்களை விளாசினார்.

அவர்களை 3வது இடத்தில் களமிறங்கி அட்டகாசமாக பேட்டிங் செய்த ஓலி போப் அயர்லாந்து பவுலர்களை துவம்சம் செய்து இரட்டை சதமடித்து 22 பவுண்டரி 3 சிக்ஸருடன் 205 (208) ரன்கள் விளாசினார். அவருடன் அசத்திய நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் 56 (59) ரன்கள் எடுக்க சுமாராக செயல்பட்ட அயர்லாந்து சார்பில் அதிகபட்சமாக ஆண்டி மெக்ப்ரின் 2 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து 352 ரன்கள் பின் தங்கிய நிலமையில் களமிறங்கிய அயர்லாந்து 2வது நாள் ஆட்டநேரம் முடிவில் 97/3 என தடுமாறி வருகிறது.

- Advertisement -

மூர் 11, பால்பிரின் 2, பால் ஸ்டிர்லிங் 15 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டான நிலையில் களத்தில் ஹாரி டெக்டர் 33*, டுக்கர் 21* ரன்களுடன் உள்ளனர். முன்னதாக இப்போட்டியில் அதிரடியாக 56 ரன்கள் எடுத்த ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் 11,000 ரன்களை கடந்த 2வது இங்கிலாந்து வீரராக சாதனை படைத்தார். அதை விட டெஸ்ட் கிரிக்கெட்டில் 11,000 ரன்களை மிகவும் இளம் வயதில் எடுத்த 2வது வீரர் என்ற இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையும் உடைத்த அவர் புதிய சாதனை படைத்தார். அந்த பட்டியல்:
1. அலஸ்டர் குக் : 31 வருடம் 357 நாட்கள்
2. ஜோ ரூட் : 32 வருடம் 154 நாட்கள்*
3. சச்சின் டெண்டுல்கர் : 34 வருடம் 95 நாட்கள்
4. ரிக்கி பாண்டிங் : 34 வருடம் 210 நாட்கள்
5. ஜேக் காலிஸ் : 34 வருடம் 245 நாட்கள்

கடந்த 2011ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் சற்று மெதுவாக விளையாடினார். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆரம்பம் முதலே கிளாஸ் நிறைந்த பேட்டிங்கை வெளிப்படுத்தி விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன் ஆகிறது வரிசையில் இணைந்து நவீன கிரிக்கெட்டில் அசத்தும் “ஃபேப் 4 பேட்ஸ்மேன்களில் ஒருவராக அசத்தி வருகிறார். குறிப்பாக கடந்த சில வருடங்களாக அந்த மூவரையும் மிஞ்சி 10,000 ரன்களை முதல் ஆளாக அடித்த அவர் தற்போது 11,000 மைல்கல்லையும் கடந்துள்ளார்.

- Advertisement -

அதை விட டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் இளம் வயதில் 10,000 அடித்த வீரர் என்ற சச்சினின் சாதனையை ஏற்கனவே உடைத்துள்ள அவர் தற்போது 32 வயது மட்டுமே நிரம்பியுள்ளதால் இன்னும் 5 வருடங்கள் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் (15921) அடித்த வீரர் என்ற சச்சினின் ஆல் டைம் சாதனையை உடைக்க அவருக்கு பிரகாசமான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க:எனக்கு ஸ்கை என்ற பட்டப் பெயரை கொடுத்ததே அவர் தான் – இந்திய ஜாம்பவானை பாராட்டி சூரியகுமார் நெகிழ்ச்சி

பொதுவாக சாதனைகள் என்றால் உடைப்பதற்காக உருவாக்கப்படுகிறது என்று சொல்வார்கள். அப்படி சச்சினின் சாதனையை ஒரு இந்தியர் உடைத்தால் மகிழ்ச்சியடைக்கூடிய இந்திய ரசிகர்களுக்கு ஜோ ரூட் உடைப்பார் என்பது கலக்கத்தை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது.

Advertisement