எனக்கு ஸ்கை என்ற பட்டப் பெயரை கொடுத்ததே அவர் தான் – இந்திய ஜாம்பவானை பாராட்டி சூரியகுமார் நெகிழ்ச்சி

Suryakumar-Yadav-2
- Advertisement -

நட்சத்திர வீரர் சூரியகுமார் யாதவ் கடந்த 2 வருடங்களில் டி20 கிரிக்கெட்டில் மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார். மும்பையை சேர்ந்த அவர் இந்தியாவுக்காக விளையாடும் லட்சியத்தில் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி 2012இல் மும்பைக்காக வாங்கப்பட்டார். இருப்பினும் பெஞ்சில் அமர்ந்திருந்து 2014இல் கொல்கத்தா வாங்கபட்ட அவர் ஓரளவு மட்டுமே சிறப்பாக செயல்பட்டார். அதனால் கொல்கத்தா விடுவித்த அவரை மீண்டும் வாங்கிய மும்பை தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தது.

அதை பயன்படுத்திய சூரியகுமார் யாதவ் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்து 2020க்குப்பின் உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்தினார். அதன் பயனாக கடந்த 2021இல் தாமதமாக 30 வயதில் அறிமுகமானாலும் டி20 கிரிக்கெட்டில் களமிறங்கிய முதல் பந்திலிருந்தே எதிரணி எப்படி பந்து வீசினாலும் சூழ்நிலை எதுவாக இருந்தாலும் பெரும்பாலான போட்டிகளில் அடித்து நொறுக்கும் பேட்டிங்கை வெளிப்படுத்திய அவர் பெரிய ரன்களைக் குவித்து இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார்.

- Advertisement -

ஸ்கை பட்டப்பெயர்:
குறிப்பாக விராட் கோலி போன்ற இதர இந்திய வீரர்களை மிஞ்சி டி20 கிரிக்கெட்டில் லேட்டஸ்ட் மேட்ச் வின்னராக அவதரித்துள்ள அவர் கடந்த வருடம் அதிக ரன்களையும் சிக்ஸர்களையும் அடித்து 2022ஆம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரர் என்ற ஐசிசி விருதையும் வென்றார். அதை விட பெரும்பாலான போட்டிகளில் எப்படி பந்து வீசினாலும் மைதானத்தின் நாலாபுறங்களிலும் கற்பனை செய்ய முடியாத ஷாட்களால் சிக்ஸர்களை பறக்க விடும் அவரை இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.

அந்த வகையில் குறுகிய காலத்திலேயே உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனாக முன்னேறி இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள அவர் சமீபத்திய ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் கோல்டன் ஹாட்ரிக் டக் அவுட்டாகி பின்னடைவை சந்தித்தார். அதன் தாக்கம் ஐபிஎல் 2023 தொடரின் ஆரம்பத்தில் எதிரொலித்தாலும் ஒரு கட்டத்திற்கு பின் மீண்டும் அடித்து நொறுக்கும் பேட்டிங்கை வெளிப்படுத்திய அவர் 605 ரன்களை 181.14 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கி மும்பை பிளே ஆப் சுற்று வரை செல்வதற்கு கருப்பு குதிரையாக செயல்பட்டார்.

- Advertisement -

அதனால் “இவரைப் போய் தவற விட்டு விட்டோமே” என்று கொல்கத்தா நிர்வாகம் நிச்சயமாக வருந்தினாலும் அவரை வளர்த்த முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் பெருமை அடைபவராகவே இருப்பார் என்று சொல்லலாம். ஆம் 2014 காலகட்டத்தில் தமது தலைமையில் இளம் வீரராக விளையாடிய சூரியகுமார் திறமையை உணர்ந்த கம்பீர் வெற்றி தோல்விகளை தாண்டி தேவையான வாய்ப்புகளை கொடுத்தார். குறிப்பாக கோப்பையை வென்ற 2014 சீசனில் கௌதம் கம்பீர் கொடுத்த முழுமையான 16 போட்டியில் 10 இன்னிங்ஸில் விளையாடிய சூரியகுமார் 164 ரன்கள் மட்டுமே எடுத்து சுமாராகவே செயல்பட்டார்.

அதே போல் 2015, 2016 சீசன்களில் முறையே 13, 11 இன்னிங்ஸில் 157, 182 ரன்களை எடுத்து சுமாராக செயல்பட்டதாலேயே கம்பீர் இல்லாத காரணத்தால் அவரை கொல்கத்தா விடுவித்தது. இந்நிலையில் சூரியகுமார் யாதவ் என்றழைப்பதற்கு பதிலாக அவரை பெரும்பாலான ரசிகர்கள் ஸ்கை என்று பட்டப்பெயருடன் தான் அழைக்கின்றனர். ஆங்கிலத்தில் ஸ்கை என்றால் வானம் என்ற அர்த்தத்திற்கேற்ப சூரியகுமாரின் வியக்க வைக்கும் பேட்டிங்கிற்கு வானமே எல்லையாக இருப்பதாக நிறைய முன்னாள் வீரர்களும் பாராட்டுகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் ஸ்கை என்ற பட்டப்பெயரை 2007, 2011 உலகக் கோப்பைகளை இந்தியா வெல்வதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்த ஜாம்பவான் கௌதம் கம்பீர் தான் தமக்கு சூட்டியதாக சூரியகுமார் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இது பற்றி பிசிசிஐ வெளியிட்டுள்ள சமீபத்திய வீடியோவில் அவர் பேசியது பின்வருமாறு. “அது 2014/15இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் நான் விளையாடிய போது வந்தது என்று நினைக்கிறேன். அந்த பெயரை கௌதம் பாய் தான் கொடுத்தார்”

இதையும் படிங்க:ENG vs IRE : லார்ட்ஸில் ப்ராட்மேன் சாதனை சமன் – ஆஸியை எச்சரிக்கும் வகையில் அயர்லாந்தை நொறுக்கிய இங்கிலாந்து

“ஏனெனில் சூரியகுமார் யாதவ் என்ற என்னுடைய பெயர் அழைப்பதற்கு பெரிதாக இருப்பதாக கருதிய அவர் ஸ்கை என்று அழைக்க தொடங்கினார். அது நாளடைவில் அனைவராலும் அழைக்கப்படுகிறது” என்று கூறினார். இதைத்தொடர்ந்து ஜூன் 7இல் துவங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் விளையாடும் இந்திய அணியுடன் சூரியகுமார் பயிற்சிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement