ENG vs IRE : லார்ட்ஸில் ப்ராட்மேன் சாதனை சமன் – ஆஸியை எச்சரிக்கும் வகையில் அயர்லாந்தை நொறுக்கிய இங்கிலாந்து

ENg vs IRE 2
- Advertisement -

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அங்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. விரைவில் பரம எதிரி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக துவங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஷஸ் கோப்பைக்கு தயாராகும் வகையில் ஜூன் 1ஆம் தேதி உலக புகழ் பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய அயர்லாந்து ஆரம்பம் முதலே துல்லியமாக பந்து வீசிய இங்கிலாந்துக்கு பதில் சொல்ல முடியாமல் சீரானில் இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து முதல் இன்னிங்ஸில் வெறும் 172 ரன்களுக்கு சுருண்டது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக தொடக்க வீரர் ஜேக் மெக்கோலம் 36 ரன்களும் குட்டீஸ் கேம்பர் 33 ரன்களும் எடுத்தனர். அந்தளவுக்கு மிரட்டலாக பந்து வீசிய இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் ஸ்டூவர்ட் ப்ராட் 5 விக்கெட்டுகளையும் ஜாக் லீச் 3 விக்கெட்டுகளையும் எடுத்தனர். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து வழக்கம் போல அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தது.

- Advertisement -

சாதனை சமன்:
குறிப்பாக பென் ஸ்டோக்ஸ் – ப்ரெண்டன் மெக்கல்லம் தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 ஆட்டத்தை விளையாடும் ஸ்டைலை பின்பற்றி வரலாறு காணாத வெற்றிகளை குவித்து வரும் அந்த அணி இந்த போட்டியில் கத்துக்குட்டியான அயர்லாந்து பவுலர்களை சரமாரியாக அடித்து நொறுக்கியது என்றே சொல்லலாம். ஏனெனில் 109 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த அந்த அணிக்கு ஜாக் கிராவ்லி 11 பவுண்டரியுடன் 56 (45) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த ஓலி போப்புடன் ஜோடி சேர்ந்த பென் டன்கட் 2வது விக்கெட்டுக்கு 252 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து 24 பவுண்டரி 1 சிக்சருடன் சதமடித்து 182 (178) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அதை விட அடுத்து வந்த நம்பிக்கை நாயகன் ஜோ ரூட்டுடன் ஜோடி சேர்ந்த ஓலி போப் தனது பங்கிற்கு மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி சதமடித்தும் ஓயாமல் அயர்லாந்து பவுலர்களை வெளுத்து வாங்கினார். அவருடன் 3வது விக்கெட்டுக்கு 146 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோ ரூட் 56 (59) ரன்களில் அவுட்டாக மறுபுறம் தொடர்ந்து அசத்திய ஓலி போப் இரட்டை சதமடித்து 22 பவுண்டரி 3 சிக்சருடன் 205 (208) ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அத்துடன் போதும் என்று நினைத்த இங்கிலாந்து தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 524/4 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது.

- Advertisement -

இப்போட்டியில் வெறும் 166 பந்துகளிலேயே 150 ரன்கள் எடுத்த ஓலி போப் வரலாற்று சிறப்புமிக்க லண்டன் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் அதிவேகமாக 150 ரன்களை அடித்த வீரர் என்ற ஜாம்பவான் டான் பிராட்மேன் சாதனையை சமன் செய்தார். இதற்கு முன் கடந்த 1930இல் இங்கிலாந்துக்கு எதிராக பிராட்மேன் அவர்கள் 166 பந்துகளில் 150 ரன்கள் எடுத்திருந்தார். அத்துடன் 205 பந்துகளில் 200 ரன்களை எட்டிய அவர் இங்கிலாந்து மண்ணில் அதிவேகமாக இரட்டை சதமடித்து வீரர் என்ற சாதனையும் படைத்தார். இதற்கு முன் 1982இல் இந்தியாவுக்கு எதிராக ஓவர் மைதானத்தில் ஜாம்பவான் இயன் போத்தம் 227 பந்துகளில் இரட்டை சதமடித்ததே முந்தைய சாதனையாகும்.

அதைத்தொடர்ந்து 352 ரன்கள் பின்தங்கிய நிலமையில் களமிறங்கிய அயர்லாந்து 2வது நாள் ஆட்டநேரம் முடிவில் 97/3 என தடுமாறி வருகிறது. மூர் 11, பால்பிரின் 2, பால் ஸ்டிர்லிங் 15 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டான நிலையில் களத்தில் ஹாரி டெக்டர் 33*, டுக்கர் 21* ரன்களுடன் உள்ளனர். இந்த டெஸ்ட் போட்டியில் ஒருநாள் கிரிக்கெட்டைப் போல 6.08 என்ற அதிரடியான ரன் ரேட்டில் பேட்டிங் செய்த இங்கிலாந்தின் வெற்றி ஆரம்பத்திலேயே பிரகாசமாகியுள்ளது. மேலும் அடுத்து நடைபெறும் ஆஷஸ் தொடருக்கு தயாராகும் வகையில் இந்த போட்டியில் ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:WTC Final : அது முடிஞ்சு போன கதை, ஆஷஸ் முன்னாடி தரமான இந்தியாவை சாய்ச்சுட்டு தான் போவோம் – நேதன் லயன் பேட்டி

அந்த வகையில் ஆஷஸ் தொடரை வெல்வதற்கு தயாராகும் பாதையில் அயர்லாந்தை அடித்து நொறுக்கும் இங்கிலாந்து இப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எச்சரிக்கை கொடுக்கும் மிரட்டி வருகிறது. மறுபுறம் இந்த அதிரடியெல்லாம் வேற அணிகளுக்கு எதிராக வேலை செய்யும் ஆனால் பட் கமின்ஸ், மிட்சேல் ஸ்டார்க் போன்ற தரமான பவுலர்களை கொண்ட எங்களுக்கு எதிராக செல்லுபடியாகாது என்று ஏற்கனவே ஸ்டீவ் ஸ்மித் போன்ற ஆஸ்திரேலிய அணியினர் எச்சரித்து குறிப்பிடப்பட்டது.

Advertisement