IND vs AUS : மழை காரணமாக 2 ஆவது டி20 போட்டியில் ஏற்படவுள்ள மாற்றம் – ரிப்போர்ட் இதோ

Nagpur
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே செப்டம்பர் 20-ஆம் தேதி மொஹாலி மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இந்திய அணியை ஆஸ்திரேலிய அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இத்தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

INDvsAUS

- Advertisement -

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது செப்டம்பர் 23-ஆம் தேதி இன்று நாக்பூர் மைதானத்தில் நடைபெற இருந்தது. வழக்கம் போல 6:30 மணிக்கு டாஸ் போடப்பட்டு 7 மணிக்கு போட்டி ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேலையில் இன்று நாக்பூர் நகரில் பலத்த மழை பெய்தது.

அதன் காரணமாக போட்டியானது டாஸ் போடுவதிலேயே தாமதம் ஏற்பட்டது. பின்னர் 7 மணிக்கு மைதான ரிப்போர்ட் வெளியாகிய பின்னர் மைதானத்தின் அவுட் ஃபீல்ட் ஈரப்பதமாக இருப்பதனால் 8 மணிக்கு மீண்டும் மைதானம் பரிசோதிக்கப்படும் என்றும் அதன் பிறகு போட்டி துவங்குவது பற்றி அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டது.

Mathew Wade

இந்நிலையில் இந்த இரண்டாவது டி20 போட்டி துவங்குவதில் தற்போது கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் தாமதம் ஏற்பட்டுள்ளதால் நிச்சயம் இந்த இரண்டாவது டி20 போட்டியானது முழுவதுமாக நடைபெறாது என்றும் சில ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டி நடைபெறலாம் என்ற முக்கிய மாற்றம் இந்த போட்டியில் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : இந்திய அணியின் பிளேயிங் லெவனில் கட்டாயம் அவருக்கு இடம் குடுக்க வேண்டும் – ஆடம் கில்க்ரிஸ்ட் வேண்டுகோள்

மேலும் ஏற்கனவே இந்த தொடரின் முதலாவது போட்டியில் ஓய்வு காரணமாக விளையாடாமல் இருந்த பும்ரா மீண்டும் அணிக்கு திரும்பதால் இந்திய அணி இந்த போட்டியை கைப்பற்ற முனைப்பு காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் சில நிமிடங்களில் இந்த இரண்டாவது போட்டியின் மாற்றங்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement