இந்திய அணியின் பிளேயிங் லெவனில் கட்டாயம் அவருக்கு இடம் குடுக்க வேண்டும் – ஆடம் கில்க்ரிஸ்ட் வேண்டுகோள்

Gilchrist
- Advertisement -

சமீப காலமாகவே இந்திய அணியை பொறுத்தவரை நிலவி வரும் ஒரே விவாதம் யாதெனில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட் விளையாடுவதா? அல்லது தினேஷ் கார்த்திக் விளையாடுவதா? என்பது மட்டும்தான். ஏனெனில் அணியில் இரண்டு பேருமே விளையாடினால் ஒரு பேட்ஸ்மேன் விளையாட முடியாது என்கிற காரணத்தினால் இவர்கள் இருவரில் ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆசிய கோப்பை தொடரில் ரிஷப் பண்ட்டிற்கு கிடைத்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்தவில்லை என்பதன் காரணமாக தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டி20 தொடரில் தினேஷ் கார்த்திக் இடம் பெற்று விளையாடி வருகிறார்.

RIshabh Pant Dinesh Karthik

- Advertisement -

இருந்தாலும் இந்திய அணியின் டாப் ஆர்டரில் அதிக அளவு வலது கை ஆட்டக்காரர்களாக இருப்பதனால் இடது கை பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட் விளையாட வேண்டும் என்று பலரும் கருத்துக்களை கூறி வருகின்றனர். இதன் காரணமாக அவர்கள் இருவரில் யாரை தேர்வு செய்வது என்பது குறித்து ரோகித் சர்மா மற்றும் அணி நிர்வாகத்திற்கு இடையே குழப்பமே ஏற்பட்டுள்ளது என்று கூறலாம்.

இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான கில்க்ரிஸ்ட் இந்த விவகாரம் குறித்து தற்போது பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : ரிஷப் பண்ட் இளம் வீரர். அதுமட்டும் இன்றி தைரியமான வீரரும் ஆவார். எனவே என்னை பொறுத்தவரை கண்டிப்பாக அவர் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ரிஷப் பண்ட் இடம்பெற வேண்டும் என்று நினைக்கிறேன்.

Rishabh Pant

அவரால் நிச்சயம் போட்டியை மாற்றி கொடுக்கும் அளவிற்கு ஒரு வலிமையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். அதனால் அவர் கண்டிப்பாக இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அவர் விளையாட வேண்டும். அதேபோன்று தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவரும் ஒரே அணியில் விளையாடினால் அது சுவாரஸ்யமாக இருக்கும்.

- Advertisement -

இந்திய அணியால் அவர்கள் இருவரையும் ஒன்றாக விளையாட வைக்க முடியும் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் தினேஷ் கார்த்திக் பன்முகத்தன்மை உடையவர். அவரால் மிடில் ஆர்டரில் விளையாடி போட்டியை பினிஷிங் செய்து கொடுக்க முடியும்.

இதையும் படிங்க : ரசிகர்கள் மீதான தாக்குதல், ஹச்சிஏ மீது பாய்ந்த வழக்கு – குற்றத்தை மறுத்து முகமது அசாருதீன் பேசியது இதோ

அவர் ஒரு அருமையான டச் பிளேயர் என்று கில்க்ரிஸ்ட் கூறியுள்ளார். இருந்தாலும் தினேஷ் கார்த்திக்கை காட்டிலும் ரிஷப் பண்ட் டாப் ஆர்டரில் விளையாட முடியும் என்பதனாலும் மிகவும் அதிரடியான ஆட்டக்காரர் என்பதினாலும் அவருக்கு வாய்ப்பினை வழங்க வேண்டும் என அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement