ரசிகர்கள் மீதான தாக்குதல், ஹச்சிஏ மீது பாய்ந்த வழக்கு – குற்றத்தை மறுத்து முகமது அசாருதீன் பேசியது இதோ

Moahmmed Azharuddin Fans
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் துவங்கியுள்ள 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் 209 ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் பந்து வீச்சில் சொதப்பி தோல்வியை சந்தித்த இந்தியா நாக்பூரில் நடைபெறும் 2வது போட்டியில் வென்று தலைநிமிர போராட உள்ளது. சமீப காலங்களில் முதல் போட்டியில் தோற்றாலும் அதற்காக பின்வாங்காமல் கொதித்தெழுந்து வெல்லும் அணியாக செயல்பட்டு வரும் இந்தியா 2வது போட்டியில் வென்று செப்டம்பர் 25ஆம் தேதியன்று நடைபெறும் 3வது போட்டியிலும் வெல்லும் என இந்திய ரசிகர்கள் முழுமையாக நம்புகின்றனர். அதனால் ஹைதராபாத் நகரில் நடைபெறும் 3வது போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்குவதற்கு செப்டம்பர் 22ஆம் தேதியன்று காலை முதலே ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

பொதுவாகவே இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் நிறைய மைதானங்கள் இருப்பதால் இந்தியா பங்கேற்கும் சர்வதேச போட்டி ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் ஒரு வருடத்திற்கு அல்லது 2 வருடத்திற்கு முறை நடைபெறுவது வழக்கமாகும். அந்த வகையில் பல மாதங்கள் கழித்து தங்களது ஊரில் இந்தியா பங்கேற்கும் போட்டியை நேரில் சென்று பார்த்துவிட வேண்டுமென்று திரண்ட ஹைதராபாத் ரசிகர்கள் டிக்கெட் விற்கப்பட்ட ஜிம்கானா மைதானத்தில் ஆயிரக்கணக்கில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

- Advertisement -

ப்ளாக் டிக்கெட்:
ஒரு கட்டத்தில் அதிகப்படியான ரசிகர்கள் ஒரே நேரத்தில் டிக்கெட் வாங்க வந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. எனவே நிலைமையை சமாளிக்க அழைக்கப்பட்ட உள்ளூர் காவல்துறை இறுதியில் ரசிகர்கள் மீது தடியடி நடத்திய அவல நிலை ஏற்பட்டது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. அந்த தாக்குதலின் இறுதியில் 20 ரசிகர்கள் காயமடைந்ததாகவும் 4 ரசிகர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது அனைவரையும் வேதனையடைய வைத்தது.

மேலும் இந்தியா பங்கேற்கும் போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்க ஏராளமான ரசிகர்கள் வருவார்கள் என்று தெரிந்தும் அதை சரியாக திட்டமிட்டு கையாளாத ஹைதராபாத் கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தின் மெத்தன போக்கை நிறைய பேர் கண்டித்து வருகிறார்கள். இந்நிலையில் வழக்கமாக டிக்கெட் விற்கும் முறையை காட்டிலும் சில ஹைதராபாத் நிர்வாகிகள் பிளாக்கில் டிக்கெட் விற்க முயற்சித்ததே ரசிகர்கள் விதிமுறைகளை மீறி தடுப்புச் சுவரைத் தாண்டி டிக்கெட் வாங்க முயற்சிக்க காரணமென்று தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது.

- Advertisement -

அப்படி விதிமுறைக்கு புறம்பாக நடந்து ரசிகர்களை காயமடைய காரணமாக இருந்த ஹைதராபாத் வாரியம் மற்றும் அதன் தலைவர் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் மீது 430 மற்றும் 417 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளதாகவும் தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது. இருப்பினும் அன்றைய நாளில் விற்கப்பட்ட 3000 டிக்கெட்டுகளை வாங்க 30000 ரசிகர்கள் வந்ததால் நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றதாக தெரிவிக்கும் ஹைதராபாத் கிரிக்கெட் வாரிய தலைவர் மற்றும் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் தங்கள் மீது எந்த தவறுமில்லை என்று சாட்டப்படும் குற்றங்களை மறுத்துள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஒரு அறையில் உட்கார்ந்து விவாதித்து ஒரு போட்டியை நடத்துவது எளிதான காரியமல்ல. நாங்கள் தவறாக எதையும் செய்யவில்லை. காயமடைந்த ரசிகர்களுக்காக நிற்கும் நாங்கள் அவர்களுடைய நலனை பார்த்துக் கொள்கிறோம். அத்துடன் இந்த டிக்கெட் விற்பனை சம்பந்தமான மொத்த அறிக்கையையும் விரைவில் நான் விளையாட்டு அமைச்சரிடம் ஒப்படைக்க உள்ளேன். அவர் எது சரி எது தவறு என்று உங்களிடம் தெரிவிப்பார்”

- Advertisement -

“அங்கு சில பிரச்சனைகள் ஏற்படும். ஆம் இங்கு 3 வருடங்கள் கழித்து போட்டி நடைபெறுவதால் அதை பார்க்க பொதுமக்கள் மிகவும் விரும்புகிறார்கள். இருப்பினும் அவர்கள் அனைவராலும் போட்டியை பார்க்க முடியாது. இது பற்றிய முழு விவரத்தையும் நாங்கள் விரைவில் மற்றொரு செய்தியாளர் சந்திப்பில் தெரிவிப்போம். மறைக்கும் அளவுக்கு நாங்கள் தவறாக எதுவும் செய்யவில்லை”

“அதே சமயம் இப்போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்பதையும் நாங்கள் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் இது சம்பந்தமாக என்னுடைய அதிகாரத்தை பறிக்கும் வகையில் சுப்ரீம் கோர்ட்டு எந்த தீர்ப்பையும் வழங்கவில்லை” என்று கூறினார்.

இதையும் படிங்க : ஷாஹீன் ஷா அப்ரிடியை விட அந்த இந்திய பவுலர் உலககோப்பையில் கலக்குவாரு – பாண்டிங் கருத்து

எது எப்படி இருந்தாலும் இந்தியா விளையாடும் போட்டிக்காக பெரிய அளவில் திரள்வார்கள் என தெரிந்தும் அதை கட்டுப்படுத்த தவறிய ஹைதராபாத் வாரியம் மற்றும் அசாருதீன் ஆகியோர் மீது பிளாக்கில் டிக்கெட் விற்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது ஒரு கருப்பு புள்ளியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement