ஷாஹீன் ஷா அப்ரிடியை விட அந்த இந்திய பவுலர் உலககோப்பையில் கலக்குவாரு – பாண்டிங் கருத்து

Ponting
- Advertisement -

கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் டி20 உலகக்கோப்பை தொடரானது அக்டோபர் 16-ஆம் தேதி முதல் நவம்பர் 13-ஆம் தேதி வரை ஆஸ்திரேலியா நாட்டில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் பங்கேற்கவுள்ள 16 அணிகளும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு தற்போது இந்த உலகக் கோப்பை தொடருக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வரும் வேளையில் இத்தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தங்களது அணியை பலமாக கட்டமைத்து வருகின்றன.

Mathew Wade

- Advertisement -

அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் இந்த உலகக் கோப்பை தொடரை கைப்பற்றும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்படும் இந்திய அணியும் ரோகித் சர்மா தலைமையில் 15 பேர் கொண்ட வீரர்களை அறிவித்துள்ளது. அதேவேளையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சொந்த மண்ணில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் தற்போது பங்கேற்று விளையாடி வருகிறது.

இந்நிலையில் இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் ஆசிய கோப்பையில் காயம் காரணமாக விளையாடாமல் இருந்த இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியிருப்பதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது.

Jasprit Bumrah

இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் விளையாடாத பும்ரா இரண்டாவது t20 போட்டியில் நிச்சயம் இந்திய அணிக்காக விளையாடுவார் என்று கூறப்படும் வேளையில் ஆசிய கோப்பை கோப்பையில் காயம் காரணமாக விளையாடாமல் இருந்த ஷாஹீன் ஷா அப்ரிடியும் மீண்டும் பாகிஸ்தான் அணியில் இடம் பிடித்துள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் இந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக எதிர்வரும் உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடப் போகும் வீரர் யார்? பும்ராவா? ஷாஹீன் அப்ரிடியா? என்பது குறித்த கேள்வி ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங்கிடம் எழுப்பப்பட்டது. இது குறித்து அவர் கூறுகையில் : ஷாஹின் அப்ரிடியை விட பும்ரா முன்னிலையில் உள்ளார் என கருதுகிறேன்.

இதையும் படிங்க : இப்படி செயல்பட்டால் உ.கோ வெல்ல முடியாது – இந்திய அணியின் தோல்வி பற்றி எச்சரிக்கையுடன் கங்குலி பேசியது என்ன

ஏனெனில் அவருடைய அனுபவத்தை வைத்து பார்க்கும்போது ஆஸ்திரேலியாவில் அவர் மிகச் சிறப்பாக செயல்படுவார். ஷாஹீன் அப்ரிடியை விட பும்ரா ஆஸ்திரேலியா மைதானத்தில் அதிக அளவு போட்டிகளில் விளையாடியுள்ளார். எனவே அனுபவத்தின் அடிப்படையிலும், திறமையின் அடிப்படையிலும் நிச்சயம் பும்ரா மிகச்சிறப்பாக ஆஸ்திரேலியாலில் செயல்படுவார் என்று நம்புகிறேன் என ரிக்கி பாண்டிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement