IND vs AUS : இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 2 ஆவது ஒருநாள் போட்டி – பாதிக்கப்பட வாய்ப்பு

IND-vs-AUS
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடியது. இந்த தொடரை இந்திய அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றியது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெற உள்ளது.

IND vs AUS

- Advertisement -

அதன்படி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டியானது இன்று மார்ச் 17-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் துவங்குகிறது. இந்த போட்டியில் இரு அணிகளும் வெற்றியுடன் தொடங்க கடுமையான போராட்டத்தை அளிக்கும் என்பதால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதனை தொடர்ந்து 19-ஆம் தேதி நடைபெற இருக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டியானது பாதிக்கப்பட்ட வாய்ப்பு உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. ஏனெனில் இரண்டாவது போட்டி மார்ச் 19-ஆம் தேதி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Rain

ஆனால் ஆந்திர மாநிலத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக 19ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ள இந்த இரண்டாவது போட்டி மழையால் பாதிக்கப்பட்ட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : எங்க காலத்துல சச்சின், தோனி காயமடையல, இப்போ பும்ரா போன்றவர்கள் காயமடைய விராட் ஸ்டைலே காரணம் – சேவாக்

மேலும் அடுத்த மூன்று நாட்களுக்கு கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என வானிலை அதிகாரிகள் கணித்துள்ளனர். இதன் காரணமாக இந்த இரண்டாவது போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement