IND vs AUS : இந்த ஒரு சம்பவம் நடந்தப்பவே நாம ஜெயிச்சிடுவோம்னு எனக்கு தெரியும் – கே.எல் ராகுல் பேட்டி

KL-Rahul
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது இந்தூர் கிரிக்கெட் மைதானத்தில் செப்டம்பர் 24-ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 399 ரன்களை குவித்தது.

இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக சுப்மன் கில் 104 ரன்களையும், ஷ்ரேயாஸ் ஐயர் 105 ரன்களையும், சூரியகுமார் யாதவ் 72 ரன்களையும், கே.எல் ராகுல் 52 ரன்களையும் குவித்து அசத்தினர்.

- Advertisement -

பின்னர் 400 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது பேட்டிங் செய்த போது மழை குறுக்கிட்ட பின் 33 ஓவர்களில் 317 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வேளையில் 28.2 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 217 ரன்களை மட்டுமே குவித்தது.

இதன் காரணமாக இந்திய அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் கே.எல் ராகுல் கூறுகையில் : இன்று காலை நான் இந்த மைதானத்தை பார்க்கும் போது அதிகமாக ஸ்பின் ஆகும் என்று நினைக்கவில்லை. நான் இந்த போட்டியில் அதிக ரன்களை நாங்கள் குவிக்கும்போதே எனக்கு நம்பிக்கை வந்து விட்டது.

- Advertisement -

அதனால் எங்களுடைய வேலை இன்று மிகவும் தெளிவாக இருந்தது. நாங்கள் எந்த வீரரை தேர்வு செய்தாலும் அவர்கள் சிறப்பாக செயல்பட போகிறார்கள். எனவே எங்களுக்கு வீரர்களை தேர்வு செய்வதில் எந்த ஒரு கடினமும் இல்லை. அனைவருமே தங்களது வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி வருகின்றனர். ஒரு சில கேட்ச் வாய்ப்புகளையும், பீல்டிங் தவறுகளையும் வீரர்கள் செய்கிறார்கள். ஆனால் அதெல்லாம் உடலளவில் சவாலானதாக இருப்பதாலே செய்கிறார்கள்.

இதையும் படிங்க : IND vs AUS : மழையை தாண்டி பந்து வீச்சிலும் ஆஸியை மிரட்டிய இந்தியா.. 2 தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது எப்படி?

மற்றபடி பயிற்சியாளர்கள் அனைவரும் வீரர்களுக்கு சரியான பயிற்சியை வழங்குகின்றனர். சில சமயம் இது போன்ற குறைகள் ஏற்படும். ஆனால் நம் அணிக்காக போராட வேண்டும் என்று நினைக்கும் போது அனைத்துமே சாத்தியப்படும். அந்த வகையில் இந்த போட்டியில் நமது அணி சிறப்பாக செயல்பட்டது. இதைவிட அடுத்த போட்டியில் நாம் இன்னும் சிறப்பாக செயல்படுவோம் என்று இந்த வெற்றி குறித்து கே.எல் ராகுல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement