IND vs AUS : மழையை தாண்டி பந்து வீச்சிலும் ஆஸியை மிரட்டிய இந்தியா.. 2 தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது எப்படி?

IND vs AUS 3
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 5 வித்தியாசத்தில் வென்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அந்த நிலைமையில் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்க முக்கியமான 2வது போட்டி செப்டம்பர் 24ஆம் தேதி இந்தூரில் மதியம் 1.30 மணிக்கு துவங்கியது. அதில் தொடரை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே ருதுராஜ் 8 ரன்னில் ஹேசல்வுட் வேகத்தில் அவுட்டானாலும் மறுபுறம் சுப்மன் கில் அதிரடியாக விளையாடினார். அவருடன் அடுத்ததாக களமிறங்கி சிறப்பாக செயல்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் காய்த்திலிருந்து குணமடைந்து சமீபத்திய ஆசிய கோப்பில் தடுமாறிய கதைக்கு முற்றுப்புள்ளி வைத்து வேகமாக ரன்களை குவித்தார்.

- Advertisement -

அந்த வகையில் 31 ஓவர்கள் வரை ஆஸ்திரேலிய பவுலர்களை பந்தாடி நேரடியாக ரன்களை சேர்த்து இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை வலுப்படுத்திய போது ஸ்ரேயாஸ் ஐயர் சதமடித்து 105 (90) ரன்கள் குவித்து அவுட்டானார். அடுத்த சில ஓவர்களில் மறுபுறம் அசத்திய கில் தம்முடைய பங்கிற்கு சதமடித்து 104 (97) ரன்களில் ஆட்டமிழக்க அதைத்தொடர்ந்து வந்த இசான் கிசான் அதிரடியாக விளையாட முயற்சித்து 31 (18) ரன்களில் அவுட்டானார்.

இருப்பினும் அந்த நல்ல துவக்கத்தை வீணடிக்காத வகையில் மிடில் ஆர்டரில் கேப்டன் கேஎல் ராகுல் அதிரடியாக விளையாடி 52 ரன்கள் குவித்தார். அவரை விட மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாமல் கேமரூன் கிரீன் வீசிய ஒரே ஓவரில் 4 சிக்சர்கள் அடித்தது உட்பட மொத்தம் 72* (37) ரன்கள் விளாசிய சூரியகுமார் யாதவ் சூப்பரான ஃபினிஷிங் கொடுத்தார். அதனால் 50 ஓவர்களில் இந்தியா 399/5 ரன்கள் எடுக்க சுமாராக செயல்பட்ட ஆஸ்திரேலிய சார்பில் அதிகபட்சமாக கேமரூன் கிரீன் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

அதை தொடர்ந்து 400 என்ற பெரிய இலக்கை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு மேத்தியூ ஷார்ட்டை 9 ரன்களில் அவுட்டாக்கிய பிரசித் கிருஷ்ணா கேப்டன் ஸ்மித்தை கோல்டன் டக் அவுட்டாக்கி தெறிக்க விட்டார். இருப்பினும் மறுபுறம் டேவிட் வார்னர் அசத்திய நிலையில் மழை வந்து ஒரு மணி நேரம் போட்டியை தாமதம் செய்ததால் ஆஸ்திரேலியாவுக்கு 33 ஓவரில் 317 ரன்கள் தேவை என்ற புதிய இலக்கு உருவாக்கப்பட்டது.

அந்த நிலைமையில் பந்தை சுழற்றிய ரவிச்சந்திரன் அஸ்வின் மார்னஸ் லபுஸ்சேனை 27 ரன்களில் போல்டாக்கி மறுபுறம் சவாலை கொடுத்த வார்னரை 53 ரன்களில் அவுட்டாக்கி அடுத்து வந்த ஜோஸ் இங்லீஷையும் 6 ரன்களில் காலி செய்தார். அதைத்தொடர்ந்து வந்த அலெக்ஸ் கேரி 14, கேமரூன் கிரீன் 19, ஆடம் ஜாம்பா 5 ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினர்.

- Advertisement -

அதனால் இறுதியில் சீன் அபௌட் அதிரடியாக 54 (36) ரன்களும் ஹேசல்வுட் 23 (16) ரன்கள் எடுத்த போதிலும் 28.2 ஓவரில் 217 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல் அவுட்டானது. அந்தளவுக்கு பந்து வீச்சிலும் மிரட்டிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர். அதனால் 99 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா 2 – 0* (3) என்ற கணக்கில் விராட் கோலி போன்ற முதன்மை வீரர்கள் இல்லாமலேயே இத்தொடரின் கோப்பையை வென்று 2023 கோப்பைக்கு தயாராக இருக்கிறோம் என்பதை காண்பித்து நம்பர் ஒன் அணி என்பதை நிரூபித்தது.

இதையும் படிங்க: IND vs AUS : பாண்டிங் உலக சாதனை சமன்.. ஹாசிம் அம்லா சாதனையை உடைத்த சுப்மன் கில் – ஷிகர் தவானை மிஞ்சி புதிய வரலாற்று சாதனை

மேலும் 2021இல் 2 – 1 (3) என்ற கணக்கிலும் 2023 மார்ச்சில் 2 – 1 (3) என்ற கணக்கிலும் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா வலுவான அணியாக திகழும் இந்தியாவுக்கு 2 தொடர் தோல்விகளை பரிசளித்தது. அதை தற்போது நிறுத்தியுள்ள இந்தியா இத்தொடரின் கோப்பையை வென்று ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்துள்ளது.

Advertisement