IND vs AUS : பாண்டிங் உலக சாதனை சமன்.. ஹாசிம் அம்லா சாதனையை உடைத்த சுப்மன் கில் – ஷிகர் தவானை மிஞ்சி புதிய வரலாற்று சாதனை

Shubman Gill Record
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் ஆஸ்திரேலியா முதல் போட்டியில் தோல்வியை சந்தித்து ஆரம்பத்திலேயே பின்தங்கியது. அந்த சூழ்நிலையில் செப்டம்பர் 24ஆம் தேதி மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் நடைபெற்று 2வது போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய அந்த அணி டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு ருதுராஜ் 8 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தாலும் அடுத்ததாக வந்த ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தார். அதற்கு நிகராக மறுபுறம் சுப்மன் கில் தம்முடைய பங்கிற்கு அதிரடி காட்டிய நிலையில் எதிர்புறம் காயத்திலிருந்து குணமடைந்து தடுமாறி வந்த கதைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரேயாஸ் ஐயர் 11 பவுண்டரி 3 சிக்சருடன் சதமடித்து 105 (90) ரன்கள் குவித்து அவுட்டானர்.

- Advertisement -

கில்லின் சாதனைகள்:
அவருடன் 2வது விக்கெட்டுக்கு 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை வெளிப்படுத்திய சுப்மன் கில் தம்முடைய தரத்தைக் காட்டி 6 பவுண்டரி 4 சிக்சருடன் சதமடித்து 104 (97) ரன்கள் குவித்தார். அவர்களை தொடர்ந்து வந்த இசான் கிஷான் அதிரடியாக விளையாடும் முனைப்பில் 31 (18) ரன்களில் அவுட்டானாலும் கடைசி நேரத்தில் வெளுத்து வாங்கிய சூரியகுமார் யாதவ் 72* (37) ரன்களும் கேப்டன் ராகுல் 52 (38) ரன்களும் எடுத்தனர்.

அதனால் 50 ஓவர்களில் 399/5 ரன்கள் குவித்த இந்தியா ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்து சாதனை படைத்தது. மேலும் இப்போட்டியில் அடித்த 104 ரன்கள் சேர்த்து ஒருநாள் கிரிக்கெட்டில் 35 இன்னிங்ஸில் தம்முடைய 6வது சதத்தை கில் பதிவு செய்துள்ளார். இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் வேகமாக 6 சதங்கள் அடித்த இந்திய வீரர் என்ற சிகர் தவான் சாதனையை உடைத்த அவர் புதிய சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல் (இன்னிங்ஸ்):
1. சுப்மன் கில் : 35*
2. ஷிகர் தவான் : 46
3. கேஎல் ராகுல் : 53
4. விராட் கோலி : 61
6. கௌதம் கம்பீர் : 68

- Advertisement -

அத்துடன் மொத்தமாக 35 இன்னிங்ஸில் 1917 ரன்கள் குவித்துள்ள அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் 35 இன்னிங்ஸ் முடிவில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற தென்னாப்பிரிக்காவின் ஹாசிம் அம்லா சாதனையை தகர்த்து புதிய வரலாறு படைத்துள்ளார். அந்த பட்டியல் (ரன்கள்):
1. சுப்மன் கில் : 1917*
2. ஹாசிம் அம்லா : 1844
3. பாபர் அசாம் : 1758

அதை விட கடந்த 2023 ஜனவரியில் இலங்கைக்கு எதிராக திருவனந்தபுரத்தில் 116 ரன்கள் அடித்த அவர் நியூசிலாந்துக்கு எதிராக பிப்ரவரியில் ஹைதராபாத் மைதானத்தில் 208 ரன்கள் விளாசி இதே இந்தூர் மைதானத்தில் 112 ரன்கள் அடித்தார். அதாவது சொந்த மண்ணில் ஏற்கனவே இந்த வருடம் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் 3 சதங்கள் அடித்த அவர் இதையும் சேர்த்து 4வது சதத்தை பதிவு செய்துள்ளார்.

இதையும் படிங்க: IND vs AUS : வரலாறு காணாத அளவுக்கு ஆஸியை அடித்து நொறுக்கிய இந்திய அணி.. 10 வருட சாதனையை உடைத்து புதிய வரலாற்று சாதனை

இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் சொந்த மண்ணில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற ரிக்கி பாண்டிங், ஜாஹீர் அப்பாஸ் ஆகியோரின் உலக சாதனையும் அவர் சமன் செய்துள்ளார். இதற்கு முன் கடந்த 2007இல் ஆஸ்திரேலிய மண்ணில் ரிக்கி பாண்டிங் மற்றும் 1982இல் பாகிஸ்தான் மண்ணில் ஜாகிர் அப்பாஸ் ஆகியோர் தலா 4 ஒருநாள் சதங்கள் அடித்துள்ளனர்.

Advertisement