IND vs AUS : கொழும்புவில் இருந்து சண்டிகர் வந்தும் இந்திய அணியை துரத்தும் சம்பவம் – பாதியில் நிறுத்தப்பட்ட போட்டி

Mohali
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த தொடரின் முதலாவது ஒருநாள் போட்டியானது செப்டம்பர் 22-ஆம் தேதி இன்று மொஹாலி மைதானத்தில் மதியம் 1:30 மணிக்கு தொடங்கியது. அதன்படி இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற கேப்டன் கே.எல் ராகுல் இந்திய அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார்.

அதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா அணியானது தற்போது முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்நிலையில் இலங்கையில் இருந்து இந்திய அணி தற்போது நாடு திரும்பி இருந்தாலும் இன்னமும் ஒரு சிக்கல் இந்திய அணியை தொடர்ந்துகொண்டே தான் இருக்கிறது.

- Advertisement -

ஏனெனில் இந்த போட்டியின் ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 35.4 ஓவர்களில் நான்கு விகெடுகளை இழந்து 166 ரன்கள் குறித்திருந்த வேளையில் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

ஏனெனில் மொஹாலி மைதானத்தில் இன்று பெரிய அளவில் மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்று கூறப்பட்டாலும் தற்போது சிறிய அளவிலான மழை பெய்ததால் போட்டி சிறிதுநேரம் தடைபட்டது. அதனை தொடர்ந்து சில நிமிடங்கள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் போட்டி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

- Advertisement -

ஏற்கனவே இந்திய அணி இலங்கையில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் போது பல போட்டிகளில் மழையின் காரணமாக சிரமத்தை சந்தித்திருந்த வேளையில் இலங்கையில் இருந்து இந்தியா திரும்பியும் இந்திய அணியை மட்டும் மழை துரத்தி வருகிறது. சமீபகாலமாகவே 50 ஓவர் கிரிக்கெட்டில் இந்திய அணி அசத்தி வந்தாலும் முழுப்போட்டியையும் எந்தவொரு சிக்கலும் இன்றி பார்க்க விரும்புகிறோம் என ரசிகர்களும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க : வீடியோ : ஜான் சீனா போல அவுட் கொடுக்க மறுத்த அம்பயர்.. ரொனால்டோ போல கொண்டாடிய தாஹிர்.. சிபிஎல் தொடரில் கலகலப்பு

தற்போது வரை ஆஸ்திரேலிய அணி 40 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் குவித்துள்ளது. இன்னும் போட்டியில் 10 ஓவர்கள் எஞ்சியுள்ளதால் இந்திய அணிக்கு நிச்சயம் சவாலான இலக்கையே ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement