ஜான் சீனா போல அவுட் கொடுக்க மறுத்த அம்பயர்.. ரொனால்டோ போல கொண்டாடிய தாஹிர்.. சிபிஎல் தொடரில் கலகலப்பு

Imran tahir
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்று வரும் கரீபியன் 2023 டி20 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதில் செப்டம்பர் 21ஆம் தேதி நடைபெற்ற பிளே ஆஃப் போட்டியில் கயானா அமேசான் வாரியர்ஸ் மற்றும் ட்ரிபாங்கோ நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதின. ப்ரோவிடன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற ட்ரிபாங்கோ முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய கயானா 20 ஓவர்களில் போராடி 166/7 ரன்கள் சேர்த்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக சாய்ம் ஆயுப் 49 (39) ரன்களும் அசாம் கான் 36 (17) ரன்களும் எடுக்க ட்ரிபாங்கோ சார்பில் அதிகபட்சமாக சலாம்கெய்ல் மற்றும் ஹிண்ட்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை சாய்த்தனர். அதைத் தொடர்ந்து 167 ரன்களை துரத்திய ட்ரிபாங்கோ அணிக்கு துவக்க வீரர் தேயல் 15 ரன்களில் இம்ரான் தாஹிர் சுழலில் சிக்கினார்.

- Advertisement -

ஜான் சீனா – ரொனால்டோ:
இருப்பினும் மற்றொரு தொடக்க வீரர் வால்டன் அதிரடியாக விளையாடிய நிலையில் அடுத்ததாக வந்த நட்சத்திர வீரர் நிக்கோலஸ் பூரான் 2 பவுண்டரி 2 சிக்ஸருடன் 33 (24) ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை கொடுத்தார். அவரைத் தொடர்ந்து வந்த கேப்டன் பொல்லார்ட் தம்முடைய பங்கிற்கு 23 (15) ரன்கள் எடுத்து அவுட்டானார்.

அவர்களுடன் 2 சிறந்த பார்ட்னர்ஷிப் அமைத்த வால்டன் மறுபுறம் கடைசி வரை அவுட்டகாமல் 6 பவுண்டரின் 4 சிக்சருடன் 80* (57) ரன்கள் குவித்தார். அதனால் 18.1 ஓவரிலேயே 167/3 ரன்கள் எடுத்த ட்ரிபாங்கோ 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றதால் கயானா சார்பில் அதிகபட்சமாக பிரிட்டோரியாஸ் 2 விக்கெட்டுகள் எடுத்தும் வெற்றி காண முடியவில்லை. முன்னதாக இந்த போட்டியில் 167 ரன்களை சேசிங் செய்த ட்ரிபாங்கோ அணிக்கு கேப்டன் இம்ரான் தாகிர் வீசிய 5வது ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட தேயல் சரியாக அடிக்காமல் தவற விட்டார்.

- Advertisement -

அதனால் அவருடைய காலில் பந்து பட்டதை தொடர்ந்து கயானா கேப்டன் இம்ரான் தாகிர் உடனடியாக நடுவரிடம் எல்பிடபிள்யூ முறையில் கொடுக்குமாறு கேட்டார். ஆனால் பந்து சரியாக பேட்ஸ்மேன் காலில் பட்ட போது இம்ரான் தாஹிர் தம்மை அறியாமலேயே நடுவர் பார்க்க முடியாத அளவுக்கு குறுக்கே இருந்தார். அதன் காரணமாக பிரபல மல்யுத்த வீரர் ஜான் சீனா போல “அதை சரியாக பார்க்கவில்லை” என்று தன்னுடைய முகத்திற்கு முன்பே கையை ஆட்டி இம்ரான் தாஹிரிடம் நடுவர் சொன்னார்.

அந்த நிலையில் இம்ரான் தாஹிர் ரிவியூ எடுத்தார். அதை தொடர்ந்து பெரிய துறையில் சோதிக்கப்பட்ட போது அது அவுட் என்ற தெரிய வந்ததால் அதே நடுவர் மீண்டும் தம்முடைய தீர்ப்பை மாற்றி வழங்கினார். அப்போது வழக்கமாக ஓடி கொண்டாடுவதற்கு பதிலாக அதே நடுவருக்கு முன்பாக பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ போல இம்ரான் தாஹிர் விக்கெட்டை கொண்டாடியது ரசிகர்களிடம் கலகலப்பை ஏற்படுத்தியது.

Advertisement