IND vs AUS : ப்ராபரான 8 பேர்.. இந்திய அணிக்கெதிராக ஆஸ்திரேலியா கையில் எடுத்த அதிரடி திட்டம் – ராகுலின் படை தாங்குமா?

IND-vs-AUS
- Advertisement -

பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு தற்போது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது ஒருநாள் போட்டி இன்று மொஹாலி மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிக்கான இந்திய அணியில் முன்னணி வீரர்கள் யாரும் இடம் பெற மாட்டார்கள் என்பதனால் கே.எல் ராகுல் தலைமையிலான இந்திய அணி இந்த போட்டியில் விளையாடுகிறது.

அதேவேளையில் ஆஸ்திரேலியா அணியிலும் சில முக்கிய வீரர்கள் இடம்பெறவில்லை என்றாலும் அந்த அணி பலம் வாய்ந்த அணியாகவே இந்திய அணியை எதிர்த்து இன்று விளையாடி வருகிறது. இன்றைய போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் கே.எல் ராகுல் முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தார்.

- Advertisement -

இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணியானது முதலில் பேட்டிங் செய்து வருகிறது. ஆனால் இந்திய அணியை காட்டிலும் ஆஸ்திரேலிய அணி இந்த போட்டியில் அதிரடியான திட்டத்தை கையில் எடுத்து மிக பலம் வாய்ந்த அணியாக தங்களது பிளேயிங் லெவனை வெளியிட்டுள்ளது.

ஏனெனில் ஆஸ்திரேலியா அணியில் இந்த முதல் போட்டியில் மூன்று பவுலர்கள் மட்டுமே முழுநேர பவுலர்களாக விளையாடுகின்றனர். ஆடம் ஜாம்பா, சீன் அபாட், பேட் கம்மின்ஸ் ஆகிய மூவர் மட்டுமே முழுநேர பந்துவீச்சாளர்களாக இந்த பிளேயிங் லெவனில் இடம் பெற்றுள்ளனர்.

- Advertisement -

அவர்களை தவிர்த்து மிட்சல் மார்ஷ், டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், லாபுஷேன், கேமரூன் கிரீன், ஜாஸ் இங்கிலீஸ், மார்க்கஸ் ஸ்டாய்னிஸ், மேத்யூ ஷார்ட் என 8 ப்ராப்பரான பேட்ஸ்மேன்கள் இந்த போட்டியில் விளையாடுகின்றனர். இதன் காரணமாக அந்த அணியின் பேட்டிங் ஆழமும் அதிகரிப்பதனால் நிச்சயம் இந்த போட்டியில் மிகப்பெரிய ரன்களை ஆஸ்திரேலிய அணி குவிக்கும் என்றும் இந்த அதிரடியை ராகுலின் படை தாங்குமா? என்பதில் கேள்வி எழுந்துள்ளது.

இதையும் படிங்க : வீடியோ : முதல் ஓவரிலேயே ஃபார்மில் இருக்கும் மார்ஷை காலி செய்த ஷமி.. இந்திய அணியில் நிகழந்த 5 அதிரடி மாற்றங்கள்

மேலும் 3 பந்துவீச்சாளர்களை தவிர்த்து மார்ஷ், ஸ்டாய்னிஸ், கேமரூன் கிரீன் ஆகிய மூவரும் இணைந்து 20 ஓவர் வீசிவிடுவார்கள் என்பதனால் ஆஸ்திரேலியா அணியின் பேட்டிங் ஆர்டரை இந்திய அணி எவ்வாறு சமாளிக்கப் போகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி ஆஸ்திரேலியா அணி 19 ஓவர்களின் முடிவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 101 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement