முதல் ஓவரிலேயே ஃபார்மில் இருக்கும் மார்ஷை காலி செய்த ஷமி.. இந்திய அணியில் நிகழந்த 5 அதிரடி மாற்றங்கள்

Mitchell marsh Shami
- Advertisement -

ஆசிய கோப்பையை வென்று ஆசிய கண்டத்தின் புதிய சாம்பியனாக சாதனை படைத்த தாயகம் திரும்பிய இந்தியா அடுத்ததாக 2023 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர்களுக்கு முதலிரண்டு போட்டிகளில் ஓய்வு கொடுக்கப்பட்ட இந்த தொடரில் ஆஃப் ஸ்பின்னர் இல்லாத குறையை தீர்ப்பதற்காக ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டார்.

அந்த நிலைமையில் செப்டம்பர் 22ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற தற்காலிக கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். மேலும் இந்திய கிரிக்கெட் அணியில் ரோகித் சர்மாவுக்கு பதிலாக துவக்க வீரராக ருதுராஜ் கைக்வாட் தேர்வான நிலையில் விராட் கோலிக்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

அசத்திய ஷமி:
அதே போல மிடில் ஆர்டரில் ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து சொதப்பி வரும் சூரியகுமார் யாதவ் உலகக் கோப்பைக்கு முன் ஃபார்முக்கு திரும்புவதற்காக விளையாடும் வாய்ப்பை பெற்றார். மேலும் ஆசிய கோப்பை ஃபைனலில் 6 விக்கெட்டுகள் எடுத்து வெற்றியில் முக்கிய பங்காற்றி நம்பர் ஒன் பவுலராக முன்னேறிய முகமது சிராஜுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு முகமது ஷமி தேர்வு செய்யப்பட்டார்.

அதை விட குல்தீப் யாதவுக்கு பதிலாக தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சுமார் ஒன்றரை வருடங்கள் கழித்து ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் முறையாக விளையாடும் வாய்ப்பை பெற்றார். அப்படி சோதனை முயற்சிக்காக அதிரடியான மாற்றங்கள் நிகழ்த்தப்பட்ட இந்த போட்டியில் ஆஸ்திரேலியா சார்பில் கேப்டன் பட் கமின்ஸ், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் காயத்திலிருந்து குணமடைந்து களமிறங்கியது அந்த அணிக்கு பலமாக அமைந்தது.

- Advertisement -

அந்த நிலைமையில் துவங்கிய போட்டியில் பேட்டிங்கை துவக்கிய ஆஸ்திரேலியாவுக்கு முதல் ஓவரிலேயே 4வது பந்தில் அதிரடி துவக்க வீரர் மிட்சேல் மார்ஷை தன்னுடைய ஸ்விங் பந்தால் முகமது ஷமி 4 ரன்களில் அவுட்டாக்கினார். குறிப்பாக சமீபத்திய தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் அதிரடியாக விளையாடி நல்ல ஃபார்மில் இருக்கும் அவரை ஷமி ஆரம்பத்திலேயே அவுட்டாக்கியது இந்திய அணிக்கு சாதகமாக அமைந்தது.

அதன் காரணமாக சற்று தடுமாற்றமான துவக்கத்தை பெற்ற ஆஸ்திரேலியா 10 ஓவர்களில் என்ற நிலைமையில் விளையாடி வருகிறது. அந்த அணிக்கு களத்தில் நம்பிக்கை நட்சத்திரங்கள் டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் இந்திய பவுலர்களுக்கு சவாலை கொடுத்து பெரிய ஸ்கோர் எடுக்கும் முனைப்புடன் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement