IND vs AUS : சென்னை ஒருநாள் போட்டியில் ஏற்பட்ட முறைகேடு. 12 பேர் கைது – வெளியான தகவல்

IND-vs-AUS-1
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த வேளையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று தொடரில் சமநிலை வகித்ததால் இன்று நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது இரு அணிகளுக்குமே முக்கியமான ஒரு போட்டியாக பார்க்கப்பட்டது.

IND-vs-AUS

- Advertisement -

அந்த வகையில் இன்றைய மூன்றாவது போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது 49 ஓவர்களை எதிர்கொண்டு அனைத்து விட்டுகளையும் இழந்து 269 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணி சார்பாக அதிகபட்சமாக துவக்க வீரர் மிட்சல் மார்ஷ் 47 ரன்கள் குவித்தார்.

பின்னர் 270 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 248 ரன்களை மட்டுமே அடித்தது. இதன்காரணமாக இந்திய அணி இந்த போட்டியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது மட்டுமின்றி இந்த தொடரையும் ஆஸ்திரேலிய அணியிடம் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் தவறவிட்டது.

IND vs AUS ODI

இந்நிலையில் இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனையில் முறைகேடு நடந்துள்ளதாக போலீசாரிடம் தகவல் வந்ததின் பெயரில் 12 பேர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சர்வதேச போட்டிகள் நடைபெறுவதால் இந்த போட்டியை காண அடிப்படை டிக்கெட் விலையாக ரூபாய் 1500 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்கிய பலர் கடைசி நேரத்தில் விற்றால் நல்ல லாபம் கிடைக்கும் என்பதனால் தேவைக்கு அதிகமாகவே டிக்கெட்டுகளை வாங்கி கடைசி நேரத்தில் பத்தாயிரம் ரூபாய் வரை விலையை உயர்த்தி விற்றுள்ளனர்.

இதையும் படிங்க : IND vs AUS : மாஸ் காட்டிய ஆஸி, 4 வருடங்களுக்கு பின் இந்தியாவுக்கு நேர்ந்த பரிதாபம் – கையில் வைத்திருந்த வெற்றி பறிபோனது எப்படி?

இதுகுறித்த புகார் சென்னை போலீசாரிடம் தெரிவிக்கப்படவே தற்போது நடவடிக்கை எடுத்துள்ள சென்னை போலீசார் 12 பேரை அதிக விலைக்கு டிக்கெட் விற்றதாக கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement