IND vs AUS : மாஸ் காட்டிய ஆஸி, 4 வருடங்களுக்கு பின் இந்தியாவுக்கு நேர்ந்த பரிதாபம் – கையில் வைத்திருந்த வெற்றி பறிபோனது எப்படி?

IND vs AUS ODI
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் போராடி வென்ற இந்தியா 2வது போட்டியில் படுதோல்வியை சந்தித்தது. அந்த நிலையில் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது போட்டி மார்ச் 22ஆம் தேதியன்று தமிழகத்தின் சென்னை சேப்பாக்கத்தில் மதியம் 1.30 மணிக்கு துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்று ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு 68 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த ட்ராவிஸ் ஹெட்டை 33 (31) ரன்களில் அவுட்டாக்கிய ஹர்டிக் பாண்டியா அடுத்து வந்த கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தை டக் அவுட்டாக்கி மறுபுறம் அச்சுறுத்திய மிட்சேல் மார்ஷையும் 47 (47) ரன்களில் போல்ட்டாக்கினார்.

அதனால் 85/3 என சரிந்த அந்த அணியை மிடில் ஆர்டரில் காப்பாற்ற முயன்ற டேவிட் வார்னர் 23 (28) ரன்களிலும் மார்னஸ் லபுஸ்ஷேனையும் 28 (45) ரன்களிலும் அவுட்டாகி சென்றனர். இருப்பினும் 6வது விக்கெட்டுக்கு 58 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவு காப்பாற்றிய மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் 25 (26) ரன்களிலும் அலெக்ஸ் கேரி 38 (46) ரன்களிலும் அவுட்டானார்கள். இறுதியில் சீன் அபோட் 26, அஷ்டன் அகர் 17 என டெயில் எண்டர்கள் கணிசமான ரன்கள் எடுத்த போதிலும் 49 ஓவரில் ஆஸ்திரேலியாவை 269 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

- Advertisement -

அதைத் தொடர்ந்து 270 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி 65 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த ரோகித் சர்மா 30 (17) ரன்களும் சுப்மன் கில் 37 (49) ரன்களும் எடுத்து அவுட்டானார்கள். அதைத்தொடர்ந்து விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்து நிதானத்தை வெளிப்படுத்திய கேஎல் ராகுல் 3வது விக்கெட்டுக்கு 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய போது 32 (50) ரன்களில் அவுட்டான நிலையில் அடுத்து வந்த அக்சர் பட்டேல் 2 ரன்களில் ரன் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

இருப்பினும் மறுபுறம் நங்கூரமாக நின்று அரை சதம் கடந்து அசத்திய விராட் கோலியை 36வது ஓவரின் முதல் பந்தில் 54 (72) ரன்களில் அஷ்டன் அகர் அவுட்டாக்கினார். ஆனால் அடுத்த பந்திலேயே அடுத்து வந்த சூரியகுமார் யாதவ் கிளீன் போல்டாகி இந்த தொடரில் தொடர்ந்து 3வது முறையாக கோல்டன் டக் அவுட்டாகி பெரிய பின்னடைவை ஏற்படுத்தினார்.

- Advertisement -

அதனால் பெரிய பின்னடைவை சந்தித்த இந்தியாவை மறுபுறம் காப்பாற்ற போராடிய ஹர்திக் பாண்டியாவை 40 (40) ரன்களில் அவுட்டாக்கிய ஆடம் ஜாம்பா அடுத்த சில ஓவர்களிலேயே ரவீந்திர ஜடேஜாவையும் 18 ரன்னில் அவுட்டாக்கி கதையை முடித்தார். ஏனெனில் இறுதியில் ஷமி 14 (10), குல்தீப் யாதவ் 6 ரன்களில் அவுட்டானதால் 49.1 ஓவரிலேயே இந்தியாவை 248 ரன்களுக்கு சுருட்டிய ஆஸ்திரேலியா 21 ரன்கள் வித்தியாசத்தில். வெற்றி பெற்றது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ஆடம் ஜாம்பா 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

சேப்பாக்கம் மைதானம் வரலாற்றில் சேசிங் செய்வதற்கு கடினமாக இருக்கிறது என்பதை ஆரம்பத்திலேயே கணித்த ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து விக்கெட்டுகளை இழந்தாலும் 270 என்ற நல்ல இலக்கை நிர்ணயித்தது. மறுபுறம் பந்து வீச்சில் ஆஸ்திரேலியாவின் டெயில் எண்டர்கள் 34 ரன்கள் எடுக்கும் அளவுக்கு இந்தியா சுமாராகவே செயல்பட்டது.

- Advertisement -

மேலும் பேட்டிங்கில் நல்ல தொடக்கத்தை கொடுத்த நிலையில் விராட் கோலி அவுட்டாகும் வரை வெற்றி கையிலிருந்தது. ஆனால் சூரியகுமார் யாதவ் கோல்டன் டக் அவுட்டானது பெரிய அழுத்தத்தை ஏற்படுத்திய நிலையில் கடைசி நேரத்தில் ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா பினிஷிங் செய்ய தவறியது தோல்வியை உறுதியாக்கியது. அதனால் 2 – 1 (3) என்ற கணக்கில் வலுவான இந்தியாவை அதன் சொந்த மண்ணில் மண்ணை கவ்வ வைத்து ஆஸ்திரேலியா கோப்பையை வென்றுள்ளது.

இதையும் படிங்க: முதலில் டேட்டிங் பண்ணோம் அப்றம், அனுஷ்காவுக்கு லவ் ப்ரபோஸ் செய்த தருணங்களை பகிர்ந்த விராட் கோலி

அதை விட கடைசியாக இதே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த 2019ஆம் ஆண்டு சொந்த மண்ணில் ஒரு ஒருநாள் தொடரில் தோல்வியை சந்தித்திருந்த இந்தியா அதன் பின் தொடர்ந்து 26 தொடர்களில் வென்று வந்த நிலையில் 4 வருடங்கள் கழித்து முதல் முறையாக அதே அணியிடம் மீண்டும் தோற்றுள்ளது. உலகக்கோப்பை நடைபெறும் இந்த வருடத்தில் இந்தியா இப்படி தோல்வியை சந்தித்துள்ளது இந்திய ரசிகர்களை வேதனையடைய வைத்துள்ளது.

Advertisement