முதலில் டேட்டிங் பண்ணோம் அப்றம், அனுஷ்காவுக்கு லவ் ப்ரபோஸ் செய்த தருணங்களை பகிர்ந்த விராட் கோலி

anushka
- Advertisement -

டெல்லியை சேர்ந்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி கடந்த 2008ஆம் ஆண்டு ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையை கேப்டனாக வென்று சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமாக இன்று ஜாம்பவானாக போற்றப்படும் அளவுக்கு 25000+ ரன்களையும் 75 சதங்களையும் விளாசி இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்த வருகிறார். ஆரம்ப காலங்களில் சற்று உடல் பருமனாக சுட்டித்தனமாக எதற்கெடுத்தாலும் கோபப்படும் இளைஞனாக இருந்த அவர் பல கிரிக்கெட் வீரர்களைப் போலவே சில பாலிவுட் நட்சத்திரங்களுடன் கிசுகிசுக்களில் இணைத்து பேசப்பட்டார். குறிப்பாக 2015 வாக்கில் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை விராட் கோலி காதலித்து வருவதாக வெளியான செய்திகள் உண்மையாகும் வகையில் கடந்த 2017ஆம் ஆண்டு இருவரும் தங்களது குடும்பத்தின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

anushka

- Advertisement -

அந்த வகையில் இந்தியாவின் உச்சபட்ச நட்சத்திர தம்பதிகளாக திகழ்ந்து வரும் இவர்களுக்கு கடந்த 2021ஆம் ஆண்டு வாமிகா எனும் பெண் குழந்தையும் பிறந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் முறையாக ஒரு விளம்பரத்தின் படப்பிடிப்பு நிகழ்ச்சியில் அனுஷ்கா சர்மாவை சந்தித்ததாக தெரிவிக்கும் விராட் கோலி முதல் சந்திப்பிலேயே பதற்றத்துடன் பேசியதாக கூறினார். அப்படி ஆரம்ப காலங்களில் நண்பர்களாக பழகிய தாங்கள் நாளடைவில் டேட்டிங் செய்து பின்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவுக்கு விராட் கோலி கூறியுள்ளார்.

லவ் ப்ரபோஸ்:
குறிப்பாக டேட்டிங் செய்ய துவங்குவதற்கு முன்பாக அனுஷ்கா சர்மாவுக்கு அனுப்பிய மெசேஜ் பற்றி தனது நெருங்கிய நண்பரான தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஏபி டீ வில்லியர்ஸ் உடன் சமீபத்திய யூடியூப் நிகழ்ச்சியில் மனம் திறந்து விராட் கோலி பேசியது பின்வருமாறு. “2013ஆம் ஆண்டு ஒரு விளம்பர படப்பிடிப்பு நிகழ்ச்சியின் படப்பிடிப்பு தளத்திற்கு செல்வதற்கு முன்பாக நான் மிகவும் பதற்றமாக இருந்தேன். குறிப்பாக அனுஷ்காவிடம் எப்படி ஹாய் சொல்லப் போகிறேன்? அவரிடம் என்ன பேச போகிறேன் என்பதை பற்றி நினைத்துக் கொண்டிருந்த நான் அதில் மொத்தமாக தடுமாறினேன்”

“அந்த நிலையில் படப்பிடிப்பு தளத்திற்கு அவர் வருவதற்கு 5 நிமிடங்கள் முன்பாகவே நான் சென்று விட்டேன். அப்போது அவர் எவ்வளவு உயரமாக இருப்பார் என்பது பற்றி எனக்கு தெரியவில்லை. அந்த சமயத்தில் சிலர் அவர் உயரமான ஹீல்ஸ் செருப்பு அணிந்திருப்பார் என்று என்னிடம் தெரிவித்தார்கள். அதே சமயம் அவருடன் நிற்கும் போது நான் உயரம் குறைவாக தெரிவேன் என்பதால் உயரமான ஹீல்ஸ் செருப்பு அணிய வேண்டாம் என்று யாரோ அவரிடம் சொல்லியிருக்க வேண்டும்”

- Advertisement -

“அந்த நிலையில் நிலையில் அவரை நான் சந்தித்த போது அவர் அணிந்திருந்த ஹீல்ஸை பார்த்த பின் “காலில் அணிவதற்கு இதை விட உயரமான ஒன்று உங்களுக்கு கிடைக்கவில்லையா” என்று நான் கேட்டேன்அதனால் சற்று கோபமடைந்த அவர் “எக்ஸ்கியூஸ் மீ” என்று என்னிடம் தெரிவித்தார். அதன் காரணமாக முதல் சந்திப்பே மோசமானதாகவும் பதற்றமாகவும் அமைந்தது. இருப்பினும் அதைத்தொடர்ந்து நடந்த படப்பிடிப்பில் முழு நாளும் அவருடன் இருந்த போது அவரும் சாதாரண பர்சன் என்பதை புரிந்து கொண்டேன்”

anushka

“குறிப்பாக நடுத்தர வர்க்க குடும்பத்திலிருந்து வந்த எங்களால் இணைந்து பேச முடிந்தது. அந்த அனுபவங்களால் நாங்கள் உண்மையில் இணைந்தோம். அப்போதிலிருந்து நாங்கள் நண்பர்களாக மாறி பின்னர் டேட்டிங் செய்யத் தொடங்கினோம்.  இருப்பினும் நாங்கள் உடனடியாக டேட்டிங் செய்ய துவங்கவில்லை. முதலில் நாங்கள் நீண்ட நாட்கள் பேசினோம். அப்போது அவருடன் ஏற்கனவே நான் டேட்டிங் செய்வதாக உணர்ந்தேன். அப்படியே சில மாதங்கள் நாங்கள் சுற்றிக் கொண்டிருந்தோம். அப்போது ஒருநாள் “நான் சிங்கிளாக இருக்கும் போது இதை செய்வேன் அதை செய்வேன்” என்று அவருக்கு மெசேஜ் செய்தேன்”

இதையும் படிங்க:அந்த 2 மேட்ச் எங்க நடந்தாலும் 2011 உ.கோ தோல்விக்கு இந்தியாவை பாகிஸ்தான் பழி தீர்க்கும் – சோயப் அக்தர் எச்சரிக்கை

“அதற்கு அவர் “இதை செய்தேன் அதை செய்தேன் என்றால் என்ன அர்த்தம்” என்று பதிலளித்தார். அப்போது நாங்கள் ஏற்கனவே டேட்டிங் செய்வதாக முடிவெடுத்திருந்தாலும் அந்த தருணம் எனக்கு சற்று வித்தியாசமாக இருந்தது. இருப்பினும் அவர் என்னை நல்ல பையன் என்பதை புரிந்து கொண்டார்” என்று கூறினார்.

Advertisement