அந்த 2 மேட்ச் எங்க நடந்தாலும் 2011 உ.கோ தோல்விக்கு இந்தியாவை பாகிஸ்தான் பழி தீர்க்கும் – சோயப் அக்தர் எச்சரிக்கை

Shoaib Akhtar.jpeg
- Advertisement -

ஆசிய கண்டத்தின் பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் எல்லை பிரச்சினை காரணமாக கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இருதரப்பு தொடர்களில் மோதுவதை தவிர்த்து விட்டு ஆசிய மற்றும் ஐசிசி உலகக் கோப்பைகளில் மட்டும் மோதி வருவதை அனைவரும் அறிவோம். இருப்பினும் வரும் செப்டம்பர் மாத பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருக்கும் 2023 ஆசிய கோப்பையில் எல்லை பிரச்சினை காரணமாக பங்கேற்க போவதில்லை என்று அறிவித்துள்ள பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அதை பொதுவான இடத்தில் நடத்துவதற்கு தேவையான அழுத்தத்தை கொடுப்போம் என்று தெரிவித்தார். அதனால் ஏமாற்றமடைந்த பாகிஸ்தான் வாரியம் எங்களது நாட்டுக்கு வராமல் போனால் வரும் அக்டோபர் மாதம் உங்களது நாட்டில் நடைபெறும் ஐசிசி உலக கோப்பையை நாங்களும் புறக்கணிப்போம் என்று அறிவித்துள்ளது.

Jay Shah IND vs PAk

- Advertisement -

அப்போதிலிருந்தே இருநாட்டுக்குமிடையே அனல் பறக்கும் கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் ஐசிசி மற்றும் ஆசிய கவுன்சிலுக்கு அதிக வருமானத்தை பெற்றுக் கொடுக்கும் நாடாக இருக்கும் இந்தியாவின் செயலாளர் ஜெய் ஷா ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராகவும் இந்த விவகாரத்தில் அவர் எடுக்க முடிவே இறுதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் ஆரம்பத்தில் கொதித்த பாகிஸ்தான் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவின் வழிக்கு வர துவங்கியுள்ளது. குறிப்பாக தற்போதுள்ள பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு இந்த விவகாரத்தில் உணர்ச்சிபூர்வமான முடிவு எடுக்கக் கூடாது என்று பாகிஸ்தான் தேர்வுக்குழு சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்தியாவை பழி தீர்ப்போம்:
மேலும் 2023 நடைபெறும் உலக கோப்பையை வெல்வது நம்முடைய லட்சியங்களில் ஒன்று என கேப்டன் பாபர் அசாமும் சமீபத்திய பிஎஸ்எல் தொடரின் போது தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்தியா தங்கள் நாட்டுக்கு வந்து ஆசிய கோப்பை பங்கேற்பதை விரும்புவதாக முன்னாள் வீரர் சோயப் அக்தர் தெரிவித்துள்ளார். ஒருவேளை அந்தத் தொடர் எங்கு நடைபெற்றாலும் 2023 ஆசிய மற்றும் உலகக்கோப்பை ஃபைனலில் இந்தியா – பாகிஸ்தான் மோதுவதை பார்க்க விரும்புவதாக கூறும் அவர் 2011 உலகக் கோப்பையில் மொகாலில் நடைபெற்ற அரையிறுதி போட்டியில் சந்தித்த தோல்விக்கு அந்த 2 போட்டிகளிலும் தங்களது அணி பழிவாங்க வேண்டிய நேரம் வந்துள்ளதாக எச்சரித்துள்ளார்.

Sachin

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்த விவகாரம் பற்றி அனைவரும் பேசுவது குப்பையாகும். அதே போல் இந்த விவகாரத்தில் பிசிசிஐ அல்லது பிசிபியும் எதுவும் செய்ய முடியாது. குறிப்பாக இந்திய அரசிடம் அனுமதி பெறாமல் பிசிசிஐ எதுவும் செய்ய முடியாது என்பது போலவே எங்களுடைய நாட்டின் அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தாமல் எங்கள் நாட்டு வாரியமும் எதுவும் செய்ய முடியாது. எனது தற்போதைய நிலைமையில் இந்தியா – பாகிஸ்தான் ஆசிய கோப்பை விவகாரம் பற்றி அனைவரும் தங்களது கருத்துக்களை மட்டுமே தெரிவித்து வருகிறார்கள்”

- Advertisement -

“ஆனால் இரு நாடுகளைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் இது பற்றி தேவையின்றி பேசாமல் விலகி இருக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். ஒருவேளை நரேந்திர மோடி பச்சை கொடி காட்டினால் பாகிஸ்தான் வருவதற்கு பிசிசிஐ சம்மதம் தெரிவிக்கும். என்னைப் பொறுத்த வரை ஆசிய மற்றும் உலகக்கோப்பை ஃபைனலில் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் விளையாடும். பாகிஸ்தானுக்கு இந்தியாவும் இந்தியாவுக்கு பாகிஸ்தானும் சென்று விளையாட உதவி நான் விரும்புகிறேன். அதனால் விரைவில் இருநாட்டுக்கு இடையே நல்ல உறவு ஏற்படும் என்று நம்புகிறேன்”

Akhtar

“எனவே இரு நாடுகளைச் சேர்ந்தவர்களும் அனல் பறக்க பேசாமல் நேர்மறையான எண்ணங்களுடன் இருங்கள். 2023 உலக கோப்பையின் இறுதி போட்டி மும்பை அல்லது அகமதாபாத் என எங்கு நடைபெற்றாலும் அதில் இந்தியா பாகிஸ்தான் மோதுவதை நான் விரும்புகிறேன். குறிப்பாக 2011 உலகக் கோப்பை அரை இறுதியில் நான் விளையாடாததால் அந்த போட்டியின் தோல்விக்கு இந்தியாவை பாகிஸ்தான் பழி தீர்ப்பதை விரும்புகிறேன்”

இதையும் படிங்க: 2 மாசத்துல அடுத்த கேப்டனா வருவீங்கன்னு சொன்ன அவரே என்னை ட்ராப் பண்ணிட்டாரு – 2005 பின்னணியை பகிர்ந்த சேவாக்

“அந்த போட்டி எங்கு நடைபெற்றாலும் அதை எப்படியாவது நான் பார்க்க உள்ளேன். எனவே இந்தியாவில் விளையாடுவதற்கு பாகிஸ்தான் களமிறங்குவது உலகக் கோப்பையை விட மிகப்பெரிய செய்தியாகும்” என்று கூறினார்.

Advertisement