IND vs AUS : விராட் கோலி அடிச்ச பந்து டாப் எட்ஜ் ஆன போது டிரெஸ்ஸிங் ரூமில் இதுதான் நடந்தது – அஷ்வின் பகிர்வு

Kohli-Marsh
- Advertisement -

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற பரபரப்பான இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இருந்தாலும் இந்த போட்டியில் சேசிங்கின் போது இந்திய அணி ஆரம்பத்திலேயே தடுமாறியதை நம்மால் பார்க்க முடிந்தது. ஏனெனில் இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 199 ரன்கள் மட்டுமே குவித்ததால் இந்திய அணி எளிதில் அவர்களை வீழ்த்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இந்த எளிய இலக்கினை துரத்தியபோது இந்திய அணியின் இரண்டு துவக்க வீரர்களுமே டக் அவுட்டாகி வெளியேறினர். அதேபோன்று ஷ்ரேயாஸ் ஐயரும் டக் அவுட் ஆகவே 2 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அவ்வேளையில் கே.எல் ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோர் சரிவிலிருந்து இந்திய அணியை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

- Advertisement -

ஆனால் அணியின் எண்ணிக்கை 20 ரன்களாக இருந்தபோது விராட் கோலி வெறும் 12 ரன்கள் மட்டுமே எடுத்து களத்தில் இருந்த வேளையில் ஜாஸ் ஹேசல்வுட் வீசிய பந்தில் ஃபுல் ஷாட் அடிக்க முயன்றார். அப்போது பந்து டாப் எட்ஜ்ஜாகி மேலே சென்றது. அந்த பந்தை பிடிக்க ஆஸ்திரேலியா விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி மற்றும் மிட்சல் மார்ஷ் ஆகிய இருவரும் ஓடி வந்தனர்.

ஆனால் இறுதியில் மிட்சல் மார்ஷ் பந்தை சரியாக கணிக்காமல் அதனை தவறவிட்டார். அவர் தவறவிட்ட அந்த கேட்ச் தான் நேற்று இந்திய அணி வெற்றி பெறவும் முக்கிய காரணமாக அமைந்தது. ஏனெனில் 12 ரன்களில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய கோலி மேலும் 73 ரன்கள் குவித்தார். இறுதியில் 117 பந்துகளில் 85 ரன்கள் குவித்து இந்திய அணியை நல்ல நிலைக்கு கொண்டு சென்று விட்டு ஆட்டமிழந்தார்.

- Advertisement -

ஒருவேளை விராட் கோலி கொடுத்த அந்த கேட்ச்யை மார்ஷ் சரியாக பிடித்திருந்தால் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றிருக்க கூட அது ஒரு வாய்ப்பாக இருந்திருக்கலாம். இந்நிலையில் விராட் கோலி அடித்த பந்து டாப் எட்ஜ் ஆனபோது ட்ரெஸ்ஸிங் ரூமில் என்ன நடந்தது? என்பது குறித்து தமிழக வீரர் அஸ்வின் தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : விராட் கோலி அடித்த பந்து டாப் எட்ஜ்ஜாகி மேலே சென்றதும் நான் ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்து வெளியே ஓடி வந்து விட்டேன். எனக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை.

இதையும் படிங்க : CWC 2023 : வெற்றியை மட்டுமே கண்டு வந்த ஆஸிக்கு.. 21ஆம் நூற்றாண்டில் காணாத தோல்வியை பரிசளித்த இந்தியா

அந்த அளவிற்கு ஒரு கடினமான மன ஓட்டம் இருந்தது. அதன் பின்னர் ரசிகர்கள் எல்லாம் ஆர்ப்பரித்தவுடன் தான் விராட் கோலி கொடுத்த கேட்சை அவர்கள் தவறவிட்டதே எனக்கு தெரிய வந்தது. பின்னர் மீண்டும் நான் ஓய்வறைக்கு சென்று எந்த இடத்தில் நின்றேனோ அதே இடத்தில் போட்டி முடியும் வரை நின்று கொண்டிருந்தேன். போட்டி முடியும் வரை நின்றதால் இப்போது எனக்கு கால் நன்றாக வலிக்கிறது என்று அஸ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement