- Advertisement -
இந்திய கிரிக்கெட்

5வது டி20 நடைபெறும் காபா மைதானம் எப்படி? மழை வருமா? வரலாற்று புள்ளிவிவரம்.. பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா 5 டி20 போட்டிகளில் விளையாடி வருகின்றது. அத்தொடரின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் 2வது போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. இருப்பினும் 3வது போட்டியில் வென்ற இந்தியா 4வது போட்டியிலும் ஆஸ்திரேலியாவை 119 ரன்களுக்கு சுருட்டி 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அதனால் 2 – 1* என்ற கணத்தில் இந்தியா முன்னிலை வகிக்கும் அத்தொடரின் கடைசிப் போட்டி நவம்பர் எட்டாம் தேதி நடைபெறுகிறது. அந்தப் போட்டியிலும் வென்று 3 – 1 (5) என்ற ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி கோப்பையை வெல்ல இந்தியா தயாராகி இருக்கிறது. மறுபுறம் இந்தியாவிடம் தோல்வியைத் தவிர்த்து தொடரை சமன் செய்து பதிலடி கொடுக்க ஆஸ்திரேலியாவும் தயாராக உள்ளது.

- Advertisement -

காபா மைதானம்:

அதன் காரணமாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கடைசிப் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கான்பெராவில் இருக்கும் புகழ்பெற்ற காபா கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 1.45 மணிக்கு துவங்குகிறது. 1895இல் தோற்றுவிக்கப்பட்ட இம்மைதானம் 37,000 ரசிகர்கள் அமரும் வகையில் நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. இங்கு 2006 முதல் நடைபெற்று வரும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதுவரை 11 போட்டிகள் நடைபெற்றுள்ளன.

அதில் 7 போட்டிகளில் விளையாடியுள்ள ஆஸ்திரேலியா 6 வெற்றி 1 தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது. 2018இல் இங்கு இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன் பின் இப்போது தான் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இங்கே விளையாட உள்ளன.

- Advertisement -

வெதர் ரிப்போர்ட்:

நவம்பர் 8ஆம் தேதி காபா மைதானத்தை சுற்றிய பகுதிகளில் 30 – 50% மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக அங்குள்ள வானிலை மையம் தெரிவிக்கின்றது. குறிப்பாக உள்ளூர் நேரப்படி போட்டி நடைபெறும் இரவு 7 மணி முதல் 11 மணி வரை சராசரியாக 40% மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதனால் இப்போட்டி முழுமையாக நடைபெறுவது சந்தேகமாகும்.

பிட்ச் ரிப்போர்ட்:

காபா மைதானத்தின் பிட்ச் வேகம், பவுன்ஸ் ஆகியவற்றிற்கு சாதகமாக இருந்து வருகிறது. எனவே வேகப்பந்து வீச்சாளர்கள் சரியாக பந்து வீசினால் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். ஸ்பின்னர்கள் மிடில் ஓவர்களில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். வேகம், பவுன்ஸ் ஆகியவற்றை சமாளித்தால் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் அடிக்கலாம்.

இதையும் படிங்க: சத்தமே இல்லாமல் பாண்டியாவின் இடத்தை.. ஃபில் பண்ண அவரை ஆல் ரவுண்டர்ன்னு சொல்லலாம்.. அபிஷேக் நாயர்

வரலாற்றில் இங்கு நடைபெற்ற 11 டி20 போட்டிகளின் அடிப்படையில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 160. இங்கு நடைபெற்ற போட்டிகளில் 8 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும், 3 முறை சேசிங் செய்த அணியும் வென்றுள்ளன. எனவே டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்து பெரிய ரன்கள் குவிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

- Advertisement -