IND vs AUS : முதல் டெஸ்ட் நடைபெறும் நாக்பூர் மைதானம் எப்படி? வரலாற்று புள்ளிவிவரங்கள், பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

Nagpur Cricket Ground Stadium
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிப்ரவரி 9 முதல் துவங்கும் வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் குறைந்தபட்சம் 3 போட்டிகளை வென்று வரும் ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெறும் லட்சியத்துடன் இந்தியா களறங்குகிறது. ஆனால் ஏற்கனவே பைனல் வாய்ப்பை உறுதி செய்து விட்ட ஆஸ்திரேலியா கடைசி 2 தொடர்களில் தங்களை வரலாற்றில் முதல் முறையாக தங்களது சொந்த மண்ணில் தோற்கடித்த இந்தியாவை இம்முறை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து பழி தீர்த்து தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபிக்கும் முனைப்புடன் களமிறங்குகிறது.

இருப்பினும் கடந்த 2004க்குப்பின் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் 2012க்குப்பின் உலகின் எந்த அணிக்கு எதிராகவும் சொந்த மண்ணில் தோற்காமல் வெற்றி நடை போட்டு வரும் இந்தியா இம்முறையும் வென்று பைனலுக்கு செல்லும் என்று இந்திய ரசிகர்கள் நம்புகின்றனர். மொத்தத்தில் இரு அணிகளும் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் நிறைந்திருப்பதால் இத்தொடரில் அனல் பறக்கும் என்று நம்பலாம். கடந்த 1947 முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் மோதி வரும் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இதுவரை 102 போட்டிகளில் பலப்பரீட்சை நடத்தியயுள்ளன.

- Advertisement -

நாக்பூர் மைதானம்:
அதில் 43 போட்டிகளில் வென்று ஆஸ்திரேலியா வலுவான அணியாக திகழ்கிறது. இந்தியாவும் 30 போட்டிகளில் வென்று சமமான போட்டி கொடுத்துள்ளது. 1 போட்டி டையிலும் 28 போட்டிகள் ட்ராவிலும் முடிந்துள்ளன. குறிப்பாக இத்தொடர் நடைபெறும் இந்திய மண்ணில் வரலாற்றில் இவ்விரு அணிகள் மோதிய 50 போட்டிகளில் இந்தியா 21 வெற்றிகளை பதிவு செய்தது. ஆஸ்திரேலியா 13 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. 1 போட்டி டையிலும் 15 போட்டிகள் ட்ராவிலும் முடிந்துள்ளன.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள இத்தொடரின் முதல் போட்டி மகாராஷ்டிராவில் இருக்கும் நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் அசோசியேசன் மைதானத்தில் காலை 9.30 மணிக்கு துவங்குகிறது. 45,000 ரசிகர்கள் அமரும் வகையில் நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த மைதானத்தில் 2008 முதல் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

- Advertisement -

1. இங்கு வரலாற்றில் 6 டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கியுள்ள இந்தியா 4 வெற்றிகள், தலா 1 தோல்வி மற்றும் ட்ராவை சந்தித்துள்ளது. குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வரலாற்றில் 2008இல் இங்கு நடைபெற்ற முதல் போட்டியில் 172 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.

Sehwag

2. அந்த வகையில் இந்தியாவுக்கு மிகவும் ராசியாக இருக்கும் இந்த மைதானத்தில் அதிக ரன்கள் அடித்த வீரராக விரேந்தர் சேவாக் (357) உள்ளார். இந்த மைதானத்தில் அதிக சதங்கள் அடித்த வீரர்களாக விராட் கோலி மற்றும் சச்சின் டெண்டுல்கர் தலா 2 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளனர். அதிக அரை சதங்கள் அடித்த வீரராக எம்எஸ் தோனி (4) உள்ளார்.

- Advertisement -

3. இந்த மைதானத்தில் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் எடுத்த வீரராக இந்தியாவின் ரவிச்சந்திரன் அஷ்வின் (23) முதலிடத்தில் உள்ளார். இந்த மைதானத்தில் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த பவுலராக ஆஸ்திரேலியாவின் ஜேசன் க்ரேஜா (8/215, இந்தியாவுக்கு எதிராக, 2008) உள்ளார்.

4. இந்த மைதானத்தில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி : இந்தியா – 610/6, இலங்கைக்கு எதிராக, 2017. இந்த மைதானத்தில் குறைந்தபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி : தென்ஆப்பிரிக்கா – 79 ஆல் அவுட், இந்தியாவுக்கு எதிராக, 2015

- Advertisement -

பிட்ச் ரிப்போர்ட்:
2008 முதலே நாக்பூர் மைதானம் முதலிரண்டு நாட்களை தவிர்த்து பெரும்பாலும் சுழலுக்கு சாதகமாகவே இருந்து வருகிறது. எனவே முதலிரண்டு நாட்களில் நிலவும் பேட்டிங்க்கு சாதகமான சூழ்நிலையை பயன்படுத்தி பேட்ஸ்மேன்கள் நல்ல ரன்களை குவிக்க வேண்டியது கட்டாயமாகிறது.

குறிப்பாக 324, 362, 247, 197 என்பது இந்த மைதானத்தில் இதுவரை நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் 4 இன்னிங்ஸ்களின் சராசரி ஸ்கோராகும். எனவே முதலிரண்டு நாட்களில் பேட்ஸ்மேன்களும் புதிய பந்தில் வேகப்பந்து வீச்சாளர்களும் இந்த மைதானத்தில் ஆதிக்கம் செலுத்தலாம். எஞ்சிய நேரங்களில் ஸ்பின்னர்கள் தான் ராஜாங்கம் நடத்துவார்கள்.

மேலும் 2017க்குப்பின் 5 வருடங்கள் கழித்து இங்கு டெஸ்ட் போட்டி நடைபெற்றாலும் இம்முறை உருவாக்கப்பட்டுள்ள பிட்ச் முதல் கண்ணோட்டத்தில் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே டாஸ் வெல்லும் கேப்டன் எந்த முடிவு எடுத்தாலும் தங்களுடைய முதல் இன்னிங்ஸில் பெரிய ரன்கள் குவித்தாக வேண்டும்.

இதையும் படிங்க: டீமுக்கு அதுதான் வேணும்னா. அதை செய்யவும் நான் தயார். நோ ப்ராப்லம் – கே.எல் ராகுல் வெளிப்படை

வெதர் ரிப்போர்ட்: இப்போட்டி நடைபெறும் நாக்பூரை சுற்றிய பகுதிகளில் 5 நாட்களிலும் மழைக்கான வாய்ப்பில்லை என்று இந்திய மாநில மையம் தெரிவிப்பதால் இப்படி முழுமையாக நடைபெறும் என்று நம்பலாம்.

Advertisement