தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அங்கு நடைபெற்ற மூன்று விதமான தொடர்களிலும் பங்கேற்று விளையாடி முடித்துள்ளது. அதனை தொடர்ந்து நாடு திரும்பும் இந்திய அணியானது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற உள்ள மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.
எதிர்வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க நாடுகளில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற உள்ள வேளையில் அதற்கு முன்னதாக இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இந்த சர்வதேச டி20 தொடரில் மட்டுமே பங்கேற்க இருக்கிறது.
இதன் காரணமாக இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. ஏனெனில் இந்த டி20 தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படப்போகும் வீரர்களே பெரும்பாலும் டி20 உலக கோப்பை தொடருக்கான அணியிலும் இடம் பிடிப்பார்கள்.
அதனால் இந்த தொடரில் எந்தெந்த இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்? என்பது குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது எங்கு நடைபெறும்? எந்த சேனலில் பார்க்கலாம்? என்று குறித்து தெளிவான தகவலை நாங்கள் இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம்.
அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியானது ஜனவரி 11-ஆம் தேதி மொகாலியிலும், இரண்டாவது டி20 போட்டி ஜனவரி 14-ஆம் தேதி இந்தூரிலும், மூன்றாவது டி20 போட்டி ஜனவரி 17-ஆம் தேதி பெங்களூருவிலும் நடைபெற உள்ளது.
இதையும் படிங்க : வாயை மூடிட்டு இருந்தா போதும்.. 2023 உ.கோ ஃபைனலுக்கு சேர்த்து.. ஐசிசி, விமர்சகர்களை விளாசிய ரோஹித்
இந்த தொடருக்கான மூன்று போட்டிகளையுமே ஸ்போர்ட்ஸ் 18 சேனலில் கண்டு களிக்கலாம். அது தவிர்த்து ஆன்லைன் மூலம் போட்டிகளை காண விரும்புவோர் ஜியோ சினிமா ஆப் மூலம் போட்டியை நேரலையில் கண்டுகொளிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.