வாயை மூடிட்டு இருந்தா போதும்.. 2023 உ.கோ ஃபைனலுக்கு சேர்த்து.. ஐசிசி, விமர்சகர்களை விளாசிய ரோஹித்

Rohit Sharma Press 4
- Advertisement -

தென்னாபிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்த இந்தியா 2வது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று பதிலடி கொடுத்தது. அதன் வாயிலாக தென்னாபிரிக்க மண்ணில் 2010/11க்குப்பின் 13 வருடங்கள் கழித்து ஒரு டெஸ்ட் தொடரை இந்தியா சமன் செய்து தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபித்து 2024 புத்தாண்டை வெற்றியுடன் துவக்கியுள்ளது.

இருப்பினும் கேப் டவுன் நகரில் நடைபெற்ற 2வது போட்டி 2 நாட்களுக்குள் முடிந்து போனது சில விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா தங்களின் சொந்த மண்ணில் 55 ரன்களுக்கு ஆல் அவுட்டாகும் அளவுக்கு பேட்டிங்க்கு சவாலாக இருந்த பிட்ச்சில் இந்தியா தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 153/4 என்ற நிலையில் இருந்து 153 ரன்களுக்கு ஆல் அவுட்டானது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

- Advertisement -

ரோஹித் பதிலடி:
ஆனால் இது போன்ற மைதானங்களில் விளையாட தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்தியாவில் இதே போல சுழலுக்கு சாதகமான மைதானங்கள் இருந்தால் அனைவரும் விமர்சிப்பதாக ரோகித் சர்மா அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

எனவே அவ்வாறு விமர்சிப்பவர்கள் வாயை மூடிக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கும் அவர் 2023 உலகக்கோப்பை ஃபைனல் நடந்த அகமதாபாத் மைதானம் சுமாராக இருந்ததாக ரேட்டிங் வழங்கிய ஐசிசி’யையும் விளாசியுள்ளார். இது பற்றி அவர் போட்டியில் முடிவில் பேசியது பின்வருமாறு. “இந்தியாவில் இருக்கும் பிட்ச்களை பற்றி எதுவும் பேசாமல் அனைவரும் வாயை மூடிக் கொண்டிருக்கும் வரை இது போன்ற பிட்ச்சில் விளையாடுவதற்கு நான் எந்த கவலையும் பட மாட்டேன்”

- Advertisement -

“நீங்கள் இங்கே சவாலை எதிர்கொள்வதற்காகவே வருகிறீர்கள். அதே போல நீங்கள் இந்தியாவுக்கு சவாலை எதிர்கொள்ள வருவீர்கள். இருப்பினும் 2023 உலகக் கோப்பை ஃபைனல் மைதானம் சராசரிக்கும் குறைவாக இருந்ததாக சொன்னதை என்னால் இப்போதும் நம்ப முடியவில்லை. ஏனெனில் அந்தப் பிட்ச்சில் ஒருவர் (டிராவிஸ் ஹெட்) சதமடித்தார்”

இதையும் படிங்க: ஒரே ஒரு மாஸ் வெற்றியால் தெ.ஆ, பாகிஸ்தானை முந்திய இந்தியா.. மீண்டும் பழைய கெத்தை மீட்டது எப்படி?

“அப்படிப்பட்ட சூழலில் எப்படி அது சுமாராக இருந்திருக்கும். இந்த நிலைமையில் பிட்ச்க்கு ரேட்டிங் வழங்குவதற்காக போட்டியின் நடுவர் எழுதும் குறிப்பு பற்றிய அட்டையை நான் பார்க்க விரும்புகிறேன். இந்தியாவில் முதல் நாளிலிருந்தே பந்து சுழலும் என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் அது உங்களுக்கு சரியாக இல்லை. அதே சமயம் இங்கே முதல் நாளில் இருந்தே பந்து வேகத்துக்கு சாதகமாக இருப்பது மட்டும் உங்களுக்கு சரியா? கண்டிப்பாக அந்த நிலைப்பாடு சரியல்ல” என்று கூறினார்.

Advertisement