ஒரே ஒரு மாஸ் வெற்றியால் தெ.ஆ, பாகிஸ்தானை முந்திய இந்தியா.. மீண்டும் பழைய கெத்தை மீட்டது எப்படி?

WTC Table 2
- Advertisement -

தென்னாபிரிக்கா மற்றும் இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதிய 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1 – 1 என்ற கணக்கில் சமனில் முடிந்துள்ளது. இத்தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்த இந்தியா தென்னாப்பிரிக்காவில் முதல் முறையாக ஒரு டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என்ற மாபெரும் கனவை நிஜமாக்க தவறியது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

இருப்பினும் இரண்டாவது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா 13 வருடங்கள் கழித்து தென்னாப்பிரிக்க மண்ணில் தொடரை சமன் செய்து அபார சாதனை படைத்து கோப்பையை பகிர்ந்து கொண்டது. அதிலும் கேப் டவுன் நகரில் நடைபெற்ற 2வது போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்காவை வெறும் 55 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கி இந்தியா வென்ற விதம் ரசிகர்களை பெருமையடைய வைத்தது.

- Advertisement -

இந்தியா முதலிடம்:
முன்னதாக 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற்ற இத்தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்த காரணத்தால் முதலிடத்தில் இருந்த இந்தியா புள்ளி பட்டியலில் பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற அணிகளை தாண்டி 5வது இடத்திற்கு சரிந்தது. போதாகுறைக்கு மெதுவாக பந்து வீசியதற்காக 2 புள்ளிகளை ஐசிசி கழித்ததால் 6வது இடத்திற்கு சரிந்த இந்தியா பெரிய வீழ்ச்சியை கண்டது.

மறுபுறம் அதிரடி வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா முதலிடத்திற்கு முன்னேறியது. ஆனால் இந்த போட்டியில் அதை விட அட்டகாசமான வெற்றி பெற்ற இந்தியா இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் 2 வெற்றிகள் 1 தோல்வி ஒரு டிராவை பதிவு செய்து 26 புள்ளிகளை 54.16 என்ற சதவீதத்தில் பெற்றுள்ளது.

- Advertisement -

அதன் காரணமாக 6வது இடத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த இந்தியா தற்போது 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் வங்கதேசம், பாகிஸ்தான் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற அணிகளை முந்தி தென்னாப்பிரிக்காவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்து கம்பேக் கொடுத்துள்ளது. இந்தியாவிடம் தோல்வியை சந்தித்த தென்னாப்பிரிக்கா தற்போது 2வது இடத்திற்கு சரிந்துள்ளது.

இதையும் படிங்க: இந்த மாதிரி ஒரு டெஸ்ட் மேட்சை என் வாழ்நாளில் நான் விளையாடுனதே இல்ல – தொடர்நாயகன் பும்ரா பூரிப்பு

இதைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாட உள்ளது. கடந்த 12 வருடங்களாக சொந்த மண்ணில் எந்த அணிக்கு எதிராகவும் ஒரு டெஸ்ட் தொடரில் தோற்காமல் இருந்து வரும் இந்தியா இம்முறையும் இங்கிலாந்தை வீழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை அந்தத் தொடரில் 3, 4 போட்டிகளை வெல்லும் பட்சத்தில் இந்தியா 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை இப்போதே 70% உறுதி செய்யும் என்றால் மிகையாகாது.

Advertisement