IND vs AFG : இப்படி ஒரு டிவிஸ்ட்டா? டாசுக்கு பிறகு அஷ்வினை தூக்கிய ரோஹித் – உள்ளே வந்த வீரர் யார் தெரியுமா?

Rohit-and-Ashwin
- Advertisement -

கடந்த அக்டோபர் 8-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் அவர்களை வீழ்த்திய இந்திய அணியானது இந்த நடப்பு 2023-ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடரினை அட்டகாசமாக துவங்கியுள்ளது. அதனை தொடர்ந்து இந்த தொடரின் இரண்டாவது லீக் ஆட்டத்தில் இன்று ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடுகிறது.

அதன்படி டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் சற்றுமுன் துவங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன் பின்னர் தற்போது இந்திய அணி முதலில் பந்துவீச தயாராகி வருகிறது.

- Advertisement -

இன்றைய போட்டியில் வெற்றி பெற்று இந்த தொடரில் தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் இந்திய அணியும், இந்த போட்டியில் வெற்றி பெற்று இந்த தொடரில் தங்களது வெற்றி கணக்கை துவங்கும் முனைப்புடன் ஆப்கானிஸ்தான் அணியும் விளையாடுவதால் இந்த போட்டியின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இன்றைய போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஏதாவது மாற்றம் இருக்குமா? என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் இன்றைய போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா அணியில் ஒரு மாற்றத்தை அறிவித்துள்ளது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

- Advertisement -

அதிலும் குறிப்பாக யாரும் எதிர்பாரா டிவிஸ்ட்டாக கடந்த போட்டியில் விளையாடிய தமிழக வீரர் அஸ்வின் இந்த போட்டியில் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஷர்துல் தாகூர் விளையாடுவார் என ரோகித் சர்மா அறிவித்தார். அதன்படி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : IND vs PAK : இதே வேகத்தில் இந்தியாவையும் நொறுக்குவோம்.. அந்த பிளான் ரெடியா வெச்சிருக்கோம்.. ரிஸ்வான் எச்சரிக்கை

1) ரோஹித் சர்மா, 2) இஷான் கிஷன், 3) விராட் கோலி, 4) ஷ்ரேயாஸ் ஐயர், 5) கே.எல் ராகுல், 6) ஹார்டிக் பாண்டியா, 7) ரவீந்திர ஜடேஜா, 8) ஷர்துல் தாகூர், 9) குல்தீப் யாதவ், 10) ஜஸ்ப்ரீத் பும்ரா, 11) முகமது சிராஜ்.

Advertisement