IND vs PAK : இதே வேகத்தில் இந்தியாவையும் நொறுக்குவோம்.. அந்த பிளான் ரெடியா வெச்சிருக்கோம்.. ரிஸ்வான் எச்சரிக்கை

Mohammed Rizwan 2
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 10ஆம் தேதி நடைபெற்ற 8வது லீக் போட்டியில் இலங்கை நிர்ணயித்த 345 ரன்கள் இலக்கை துரத்திய பாகிஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன் வாயிலாக உலகக்கோப்பை வரலாற்றில் அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்த அணி என்ற சாதனை படைத்த பாகிஸ்தான் 2 போட்டிகளில் அடுத்தடுத்த 2 வெற்றிகளை பெற்று அசத்தி வருகிறது.

சமீபத்திய ஆசிய கோப்பையில் இந்தியாவிடம் படுதோல்வியை சந்தித்து இலங்கையிடமும் தோல்வியை சந்தித்து ஃபைனலுக்கு கூட வராமல் வெளியேறிய அந்த அணி ஏராளமான விமர்சனங்களை சந்தித்தது. மேலும் நாசீம் ஷா காயத்தை சந்தித்து வெளியேறியது பின்னடைவாக அமைந்த நிலையில் உலகக்கோப்பை பயிற்சி போட்டிகளிலும் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்த பாகிஸ்தான் மீண்டும் கிண்டல்களுக்கு உள்ளானது.

- Advertisement -

இந்தியாவுக்கு எச்சரிக்கை:
ஆனால் முதன்மை சுற்றில் நெதர்லாந்தை தோற்கடித்த அந்த அணி நேற்று இலங்கை நிர்ணயித்த பெரிய இலக்கை பாபர் அசாம் சொற்ப ரன்களில் அவுட்டான போதும் அப்துல்லா சபிக் 113, முகமத் ரிஸ்வான் 131* ரன்கள் குவித்த அதிரடியில் எளிதாக எட்டிப் பிடித்து உலக சாதனை படைத்தது. அந்த வகையில் அடுத்ததாக அக்டோபர் 14ஆம் தேதி நடைபெறும் 3வது போட்டியில் பரம எதிரி இந்தியாவை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என்பதையும் பாகிஸ்தான் காட்டியுள்ளது.

இந்நிலையில் ஃபார்முக்கு திரும்பியுள்ள தங்களுடைய அணி இதே வேகத்தில் சில முக்கியமான திட்டங்களுடன் இந்தியாவையும் எதிர்கொள்ளும் என்று முகமது ரிஸ்வான் மறைமுகமாக எச்சரித்துள்ளார். இது பற்றி போட்டியின் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு. “எங்களுடைய அடுத்த போட்டி இந்தியாவுக்கு எதிராக நடைபெறுகிறது. எனவே இந்த வெற்றி எங்களுக்கு பெரிய தன்னம்பிக்கையை கொடுத்துள்ளது”

- Advertisement -

“மேலும் இந்தியாவுக்கு எதிராக நாங்கள் இதே போன்ற சில திட்டங்களுடன் களமிறங்க உள்ளோம். அத்துடன் தற்போது எங்களிடம் நல்ல ஃபார்ம் வேகம் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் எங்களுடைய அடுத்த போட்டி நாளை இந்தியாவுடன் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் எங்களை எதிர்கொள்ள அவர்களும் ஒரு திட்டத்துடன் வருவார்கள் என்பதால் நாங்களும் ஒரு திட்டத்துடன் வருவோம்” என்று கூறினார்.

இதையும் படிங்க: CWC 2023 : ஆரம்பத்திலேயே சொதப்பிட்டாங்க.. இனிமேல் அவங்க செமி ஃபைனல் வருவது ரொம்ப கஷ்டம்.. கம்பீர் ஓப்பன்டாக்

முன்னதாக 1992 முதல் இதுவரை நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பைகளில் சந்தித்த 7 போட்டிகளிலும் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தோல்வியை சந்தித்துள்ளது. அதன் காரணமாக உலகக் கோப்பையை வெல்லாவிட்டாலும் பரவாயில்லை இம்முறை அந்த அனைத்து தோல்விகளுக்கும் மொத்தமாக இந்தியாவை அதன் சொந்த மண்ணில் மண்ணை கவ்வ வைத்து மோசமான வரலாற்றை மாற்ற வேண்டும் என்பதே பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்களின் விருப்பமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement