IND vs AFG : 4 விக்கெட் எடுத்தாலும் எனக்கு திருப்தியில்ல. என்னோட போகஸ்ஸே வேற – ஜஸ்ப்ரீத் பும்ரா பேட்டி

Bumrah
- Advertisement -

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நேற்று அக்டோபர் 11-ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற முக்கியமான லீக் ஆட்டத்தில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது ஆப்கானிஸ்தான் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த தொடரில் தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன் காரணமாக தற்போது இந்திய அணி 2 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் பேட்டிங்கில் இந்திய அணி சார்பாக ரோகித் சர்மா சதமடித்தும், பந்துவீச்சில் ஜஸ்ப்ரீத் பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தியும் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தினர்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக முழுக்க முழுக்க பேட்டிங்-க்கு சாதகமான இந்த மைதானத்தில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா 10 ஓவர்களில் 39 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

கடந்த ஓராண்டாகவே காயம் காரணமாக சர்வதேச போட்டியில் பங்கேற்காமல் இருந்த பும்ரா அண்மையில் இந்திய அணிக்காக மீண்டும் கம்பேக் கொடுத்து இதுவரை தொடர்ச்சியாக விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி வருகிறார். இந்நிலையில் நேற்றைய போட்டியில் நான்கு விக்கெட் எடுத்தாலும் அது எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை என்று பேசியுள்ள பும்ரா இது குறித்து கூறுகையில் :

- Advertisement -

நான் தனிப்பட்ட எனது பந்துவீச்சு முடிவுகளை சார்ந்தவன் கிடையாது. இந்த போட்டியில் நான்கு விக்கெட்டுகளை எடுத்ததால் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்ற அர்த்தம் இல்லை. அதேபோன்று அசாத்தியமான செயல்பாட்டை வெளிப்படுத்தினேன் என்றும் கூற முடியாது. நான் தற்போதைக்கு என்னுடைய பந்துவீச்சில் தயாராகி வருகிறேன். இந்த உலகக் கோப்பை தொடருக்கான பிராசஸில் தற்போது ஈடுபட்டு வருகிறேன்.

இதையும் படிங்க : CWC 2023 : அவர் கூட தான் சென்னை ஹீட்டில் இந்தியாவை காப்பாத்துனாரு.. ரிஸ்வானை விமர்சித்த அக்தர்

போட்டிக்கு போட்டி மைதானத்தின் தன்மையை அறிந்து விக்கெட்டுகளை எடுக்க முயற்சித்து வருகிறேன். இன்று எனக்கு நான்கு விக்கெட் கிடைத்தது ஆனாலும் நான் இதை பெரியதாக எடுத்துக் கொள்ளப்போவதில்லை. இனிவரும் போட்டிகளிலும் என்னுடைய திறனை அதிகரித்து மைதானத்திற்கு ஏற்றார் போன்று சிறப்பாக பந்துவீசி என்னுடைய முழு பங்களிப்பையும் வழங்க விரும்புகிறேன் என பும்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement