IND vs AFG : ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச – பிளேயிங் லெவன் இதுதான்

IND-vs-AFG
- Advertisement -

அக்டோபர் 8-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் அவர்களை வீழ்த்தி இந்த உலக கோப்பை தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தது. அதோடு பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை முதல் போட்டியிலேயே இந்திய அணி வீழ்த்தியுள்ளதால் இனி வரும் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன் விளையாட இருக்கிறது.

அதனை தொடர்ந்து இந்திய அணியானது இந்த உலகக் கோப்பை தொடரில் தங்களது இரண்டாவது போட்டியில் அக்டோபர் 11-ஆம் தேதி நாளை டெல்லி மைதானத்தில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த இரண்டாவது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்கள் இடம்பிடிப்பார்கள் என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. அந்த வகையில் இந்த போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெறப்போகும் உத்தேச பிளேயிங் லெவனை நாங்கள் இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கி உள்ளோம்.

அதன்படி கடந்த போட்டியில் விளையாடிய ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோரே இந்த போட்டியிலும் துவக்க வீரர்களாக களமிறங்குவார்கள். ஏனெனில் சுப்மன் கில்லுக்கு இன்னும் டெங்கு காய்ச்சல் சரியாகாததால் இஷான் கிஷனுக்கு மேலும் ஒரு வாய்ப்பு கிடைக்கப்பட உள்ளது. அதோட மிடில் ஆர்டரில் விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல் ராகுல், ஹர்திக் பாண்டியா ஆகியோர் விளையாடுவது உறுதி.

- Advertisement -

அவர்களை தவிர்த்து பந்துவீச்சு துறையில் ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் சுழற்பந்து வீச்சாளராக செயல்படுவார்கள். சென்னை மைதானத்தில் விளையாடிய அஸ்வின் நாளைய போட்டியிலிருந்து கழட்டிவிடப்படலாம் என்று தெரிகிறது. அதற்கு பதிலாக முகமது ஷமி அணியில் இணையவும் வாய்ப்பு இருக்கிறது. மீதமுள்ள இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களாக சிராஜ் மற்றும் பும்ரா ஆகியோர் இடம்பிடிப்பார்கள். அந்த வகையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : CWC 2023 : இப்போல்லாம் இந்திய பவுலர்கள் மிரட்டலா பந்து வீச.. அதை சாப்பிடுவதே காரணம்.. அப்ரிடி அதிரடி

1) ரோஹித் சர்மா, 2) இஷான் கிஷன், 3) விராட் கோலி, 4) ஷ்ரேயாஸ் ஐயர், 5) கே.எல் ராகுல், 6) ஹார்டிக் பாண்டியா, 7) ரவீந்திர ஜடேஜா, 8) குல்தீப் யாதவ், 9) முகமது ஷமி, 10) ஜஸ்ப்ரீத் பும்ரா, 11) முகமது சிராஜ்.

Advertisement