CWC 2023 : இப்போல்லாம் இந்திய பவுலர்கள் மிரட்டலா பந்து வீச.. அதை சாப்பிடுவதே காரணம்.. அப்ரிடி அதிரடி

Shahid Afridi
- Advertisement -

சர்வதேச அளவில் முதன்மை கிரிக்கெட் அணிகளில் ஒன்றாக திகழும் இந்தியா தற்போது நடைபெற்று வரும் ஐசிசி 2023 உலக கோப்பையை சொந்த மண்ணில் வெல்லும் முனைப்புடன் களமிறங்கியுள்ளது. முன்னதாக ஆரம்ப காலங்களில் பெரும்பாலும் சுழல் பந்து வீச்சாளர்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணியின் வெற்றிகளில் சமீப காலங்களில் வேகப்பந்து வீச்சாளர்கள் அதிகப்படியான தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள் என்றே சொல்லலாம்.

குறிப்பாக தற்சமயத்தில் வித்தியாசமாக பந்து வீசி மிரட்டும் ஜஸ்பிரித் பும்ரா, உலகின் நம்பர் ஒன் பவுலராக ஜொலிக்கும் முகமது சிராஜ், துல்லியமாக வீசும் திறமையை கொண்டிருக்கும் முகமது ஷமி ஆகியோர் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு அட்டாக்கை உலகத்தரம் வாய்ந்ததாக காட்சிப்படுத்துகின்றனர். அதே போல அர்ஷிதீப் சிங், பிரசித் கிருஷ்ணா, உம்ரான் மாலிக் போன்ற இளம் வீரர்கள் வருங்காலங்களில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களாக செயல்பட காத்திருக்கின்றனர்.

- Advertisement -

அப்ரிடி கருத்து:
இந்த சூழ்நிலையில் சமீப காலங்களில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் இறைச்சி மற்றும் அசைவ உணவுகளை அதிகமாக சாப்பிடுவதாலேயே இந்தளவுக்கு மிரட்டலாக செயல்படுவதாக முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் சாகித் அப்ரிடி வித்தியாசமான கருத்தை தெரிவித்துள்ளார். மேலும் தற்போது இந்தியா வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க துவங்கியுள்ளதாகவும் பாராட்டும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

“இந்தியாவில் 1.4 பில்லியன் இன்று மிகப்பெரிய மக்கள் தொகை இருக்கிறது. அதனால் தற்போது அவர்களுடைய விளையாட்டின் தரமும் மாறி வருகிறது. ஆரம்ப காலங்களில் இந்தியா சிறந்த பேட்ஸ்மேன்களையும் பாகிஸ்தான் சிறந்த பவுலர்களையும் உருவாக்குவதாக நாம் பேசினோம். ஆனால் அதற்காக இருவருமே நல்ல பேட்ஸ்மேன் மற்றும் பவுலர்களை சம அளவு உருவாக்கவில்லை என்று அர்த்தமல்ல”

- Advertisement -

“இருப்பினும் தற்போது இந்திய பவுலர்கள் இறைச்சிகளை உண்ண துவங்கியுள்ளனர். அதனாலேயே அவர்கள் அதிகப்படியான பலத்தையும் பெற்றுள்ளார்கள். அத்துடன் ஆரம்பத்தில் இந்திய அணியில் கங்குலி நிறைய மாற்றங்களை செய்த நிலையில் தோனி அதை அப்படியே முன்னோக்கி எடுத்துச் சென்றார். அதே போல பிசிசிஐ தங்களுடைய உள்ளூர் கிரிக்கெட்டை ராகுல் டிராவிட் போன்றவர்களை பயிற்சியாளர்களாக நியமித்து முன்னேற்றுவதற்கான சரியான முதலீடுகள் செய்துள்ளது”

இதையும் படிங்க: ENG vs BAN : 36 வயதிலும் மாலன் சாதனை.. ஆல் டைம் சாதனை படைத்த ரூட்.. வங்கதேசத்தை விளாசிய இங்கிலாந்து

“அவர்களது உழைப்பால் தற்போது இந்தியா நல்ல திறமைகளை உருவாக்கி வருகிறது. ஆனால் தற்போது இந்தியா விரும்பினால் 2 அணிகளை விளையாட வைக்க முடியும். அதே போல இந்திய அணியினர் தற்போது பந்து வீச்சுக்கு அதிக முக்கியத்துவத்தை கொடுக்க துவங்கியுள்ளனர்” என்று கூறினார். இந்த நிலைமையில் உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்த இந்தியா அடுத்ததாக ஆப்கானிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement