IND vs AFG : போட்டி துவங்கும் முன்னர் 1 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்திய வீரர்கள் – நெகிழ்ச்சியான காரணம் இதோ

Anthem
- Advertisement -

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2023-ஆம் ஆண்டிற்கான நடப்பு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் மிக முக்கியமான போட்டியானது சற்று முன்னர் அருண் ஜேட்லி மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், ஹஸ்மத்துல்லா ஷாஹிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

இந்நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்ட பிறகு டாசில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஷாஹிதி தங்களது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். இதன் காரணமாக இந்திய அணியானது தற்போது முதலில் பந்து வீசி வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இன்றைய போட்டியின் டாசுக்கு பிறகு இரு நாட்டு தேசிய கீதங்களும் ஒளிக்கப்படுவதற்கு முன்னதாக மைதானத்தில் இருந்த ரசிகர்கள் மட்டுமின்றி, இருநாட்டு வீரர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் என அனைவரும் ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தியது தொடர்பான செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் அதற்கான காரணத்தை நாங்கள் இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம். அதன்படி ஆப்கானிஸ்தான் மேற்கு மாகாணமான ஹெரத் என்கிற நகரில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக 2400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி அனைவரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தது.

- Advertisement -

ரிக்டர் அளவுகோலில் 6.3 என்ற அளவில் ஏற்பட்ட இந்த மிக மோசமான நிலநடுக்கத்தால் ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது துயரத்தில் இருக்கும் ஆப்கானிஸ்தான் மக்களின் நிலையை எண்ணியும், இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களுக்காக அஞ்சலி செலுத்தும் விதமாகவும் இந்த ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதையும் படிங்க : IND vs AFG : இப்படி ஒரு டிவிஸ்ட்டா? டாசுக்கு பிறகு அஷ்வினை தூக்கிய ரோஹித் – உள்ளே வந்த வீரர் யார் தெரியுமா?

இதற்கு முன்னதாக நேற்று முன்தினம் ஆப்கானிஸ்தான் அணியின் முன்னணி வீரரான ரஷீத் கான் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக இந்த உலகக் கோப்பை தொடரில் தனக்கு கிடைக்கும் பணம் அனைத்தையும் நிதி உதவியாக வழங்குவேன் என்றும் இதர உதவிகளுக்கான பிரச்சாரத்தையும் செய்வேன் என தனது டிவிட்டர் பக்கத்தின் மூலம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement