
ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெற்ற ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி முடித்த வேளையில் தற்போது டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. இந்த தொடரும் இன்னும் ஒரு சில தினங்களில் முடிவடையவுள்ள வேளையில் அடுத்ததாக இந்திய அணி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.
இந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு பின்னர் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், அதற்கடுத்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக அடுத்தடுத்து விளையாட இருக்கிறது. ஆஸ்திரேலியா தொடர் முடிவடையுள்ள வேளையில் அடுத்து வரும் இந்த தென்னாப்பிரிக்க தொடரானது தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகளவு கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த வகையில் வரும் நவம்பர் 14-ஆம் தேதி முதல் நவம்பர் 26-ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இன்று இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் வெளியான அறிவிப்பில் தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் அவரது பதவியில் நீடிக்கிறார். அதேபோன்று துணை கேப்டனாக காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள ரிஷப் பண்ட் மீண்டும் தனது இடத்தினை பிடித்துள்ளார். அண்மையில் நடைபெற்று முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை அவர் காயத்தால் தவறவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்றபடி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய பெரும்பாலான வீரர்கள் இந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இடம் பிடித்துள்ளனர். மற்றபடி வேறுயெந்த மாற்றமும் இல்லை. அந்த வகையில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய டெஸ்ட் அணி இதோ :
இதையும் படிங்க : தென்னாப்பிரிக்க ஏ அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய ஏ அணி அறிவிப்பு – ரோஹித் கோலிக்கு இடமில்லை
1) சுப்மன் கில், 2) ரிஷப் பண்ட், 3) யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 4) கே.எல் ராகுல், 5) சாய் சுதர்சன், 6) தேவ்தத் படிக்கல், 7) துருவ் ஜுரேல், 8) ரவீந்திர ஜடேஜா, 9) வாஷிங்டன் சுந்தர், 10) ஜஸ்ப்ரீத் பும்ரா, 11) அக்சர் படேல், 12) நிதீஷ் குமார் ரெட்டி, 13) முகமது சிராஜ், 14) குல்தீப் யாதவ், 15) ஆகாஷ் தீப்.