தென்னாப்பிரிக்க ஏ அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய ஏ அணி அறிவிப்பு – ரோஹித் கோலிக்கு இடமில்லை

ROKO IND A
- Advertisement -

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணியானது தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வரும் வேளையில் நவம்பர் 8-ம் தேதியுடன் இந்த தொடரானது முடிவுக்கு வருகிறது. அதனை தொடர்ந்து இந்திய ஏ அணியானது தென்னாப்பிரிக்க ஏ அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

தெ.ஆ ஏ அணிக்கு எதிராக இந்திய ஏ அணி அறிவிப்பு :

அந்த வகையில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தென்னாப்பிரிக்க ஏ அணியானது இம்மாதம் நவம்பர் 13-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை ராஜ்கோட் நகரில் நடைபெற இருக்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய ஏ அணிக்கு எதிராக விளையாடயிருக்கிறது.

- Advertisement -

இந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய ஏ அணி இன்று அறிவிக்கப்பட்டது. இம்மாதம் நவம்பர் 30-ஆம் தேதி முதல் டிசம்பர் 6-ஆம் தேதி வரை முதன்மை இந்திய அணியானது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட இருக்கும் முன்னர் இந்த தொடரானது நடைபெற இருப்பதால் அனைவரது மத்தியிலும் இந்த தொடரானது கவனத்தை ஈர்த்துள்ளது.

ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் இந்திய கேப்டன்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாட இருப்பதினால் இந்த தென்னாப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் இன்று அறிவிக்கப்பட்ட இந்திய ஏ அணியில் அவர்கள் இருவருக்குமே இடம் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் நேரடியாக தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவார்கள் என்று தெரிகிறது. இந்த தென்னாப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய ஏ அணியின் கேப்டனாக திலக் வர்மா அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க : டி20 தரவரிசையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் அபிஷேக் சர்மா மற்றும் வருண் சக்கரவர்த்தி – வெளியான ரேங்கிங்

அதோடு இந்திய ஏ அணியின் துணை கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். அவர்களை தவிர்த்து அபிஷேக் சர்மா, ரியான் பராக், இஷான் கிஷன், ஆயுஷ் பதோனி, நிஷாந்த் சிந்து, விப்ராஜ் நிகம், மானவ் சுதர், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, கலீல் அகமது, பிரப் சிம்ரன் சிங் ஆகியோருக்கு இடம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement