இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான நடப்பு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியானது சற்றுமுன் மும்பை வான்கடே மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் பலப்பரிட்சை நடத்த இருக்கின்றன. அதன்படி நடைபெற்று முடிந்த டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதனை தொடர்ந்து டாஸிற்கு பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா : தாங்கள் முதலில் பேட்டிங் செய்வதாகவும் இந்த மைதானம் நன்றாக இருப்பதனால் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். மேலும் கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நாங்கள் தோல்வியை சந்தித்தோம்.
அவர்கள் ஒரு தரமான அணி தற்போது இன்னும் ஒரு முக்கியமான நாளாக எங்களுக்கு இந்த போட்டி அமைந்துள்ளது. என்னவெல்லாம் இதுவரை நாங்கள் சரியாக செய்தோமோ அதனையே இந்த போட்டியிலும் செய்ய காத்திருக்கிறோம். மைதானத்தின் தன்மையை கருத்தில் கொண்டே முதலில் பேட்டிங் செய்யும் முடிவை எடுத்ததாக ரோகித் சர்மா கூறியுள்ளார்.
அது மட்டுமின்றி லீக் சுற்று போட்டிகளில் இருந்தே இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஏதாவது மாற்றம் இருக்குமா? என்று எதிர்பார்த்த வேளையில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்யாமல் அதே அணியுடன் பயணித்து வந்த ரோகித் சர்மா தற்போது அரையிறுதியிலும் எந்த ஒரு மாற்றத்திற்கும் இடமின்றி தங்களது செட்டிலான அணியே விளையாடும் என்று அதிரடியான முடிவை அறிவித்தார்.
இதன் காரணமாக இந்திய அணி எந்த ஒரு மாற்றமும் இன்றி ஏற்கனவே பயணித்து வரும் அதே பிளேயிங் லெவனுடன் இந்த போட்டியிலும் களமிறங்கியுள்ளது. அதன்படி நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :
இதையும் படிங்க : ரோஹித் சர்மாவின் இந்த சுயநலமில்லா அப்ரோச்சால தான் இந்தியா ஜெட் வேகத்துல போகுது – சுனில் கவாஸ்கர் கருத்து
1) ரோஹித் சர்மா, 2) சுப்மன் கில், 3) விராட் கோலி, 4) ஷ்ரேயாஸ் ஐயர், 5) கே.எல் ராகுல், 6) சூரியகுமார் யாதவ், 7) ரவீந்திர ஜடேஜா, 8) முகமது ஷமி, 9) குல்தீப் யாதவ், 10) ஜஸ்ப்ரீத் பும்ரா, 11) முகமது ஷமி.