ரோஹித் சர்மாவின் இந்த சுயநலமில்லா அப்ரோச்சால தான் இந்தியா ஜெட் வேகத்துல போகுது – சுனில் கவாஸ்கர் கருத்து

Gavaskar-and-Rohit
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது லீக் சுற்றில் தாங்கள் பங்கேற்று விளையாடிய 9 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்துடன் அரையறுதிக்கு சென்றுள்ளனர். அதன்படி நடைபெறவிருக்கும் முதலாவது அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இன்று நவம்பர் 15-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ள போட்டியில் விளையாட இருக்கின்றனர்.

இந்த தொடர் முழுவதுமே அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் இந்திய அணியானது நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு சென்று கோப்பையை கைப்பற்றும் என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் இந்த சிறப்பான செயல்பாட்டிற்கு கேப்டன் ரோகித் சர்மாவின் பயமற்ற ஆட்டமும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ஏனெனில் பவர்பிளே ஓவர்களிலேயே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ரோகித் சர்மா அணியின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்துகிறார். இந்த உலகக் கோப்பை தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவரது இந்த அதிரடியான பேட்டிங் குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் கூறுகையில் :

இந்த தொடர் முழுவதுமே ரோகித் சர்மா அற்புதமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் தனது தனிப்பட்ட சாதனைகளுக்காகவோ அல்லது மைல்கல்லையோ பார்க்காமல் அணியின் வெற்றிக்காக மட்டுமே பேட்டிங் செய்து வருகிறார். குறிப்பாக முதல் 8-10 ஓவர்கள் வரை அவர் எதிரணியின் பந்துவீச்சாளர்களை அதிரடியாக கையாண்டு ஜெட் வேகத்தில் ஒரு ஸ்டார்ட் கொடுக்கிறார்.

- Advertisement -

அதன் காரணமாக பின்னால் வரும் வீரர்கள் மீதமுள்ள 40 ஓவர்களில் சுமாராக விளையாடினாலும் அணியின் எண்ணிக்கை பெரிய அளவிற்கு செல்கிறது. அவரது இந்த பயமற்ற அதிரடியான பேட்டிங்கே இந்திய அணியின் பெரிய ரன் குவிப்பிற்கு காரணமாகவும் பார்க்கிறேன். அதோடு ஒருபுறம் அவர் அதிரடியாக மறுபுறம் சுப்மன் கில்லும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்.

இதையும் படிங்க : அது மட்டும் கிடைச்சா போதும்.. இந்தியாவை செமி ஃபைனலில் நியூஸிலாந்து தோற்கடிக்கும்.. சைமன் டௌல் பேட்டி

இவர்கள் இருவருமே இந்திய அணிக்கு கொடுக்கும் துவக்கம் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற உதவுகிறது என்று கருதுவதாக சுனில் கவாஸ்கர் தனது பாராட்டினை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த உலகக் கோப்பை தொடர் முழுவதுமே ரோகித் சர்மா இதுவரை 55 ரன்கள் சராசரியுடன் 121 ஸ்ட்ரைக் ரேட்டுடன் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஒரு சதம் மற்றும் மூன்று அரை சதங்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement