ஆசிய கோப்பை 2022 : 15 பேர் கொண்ட அணியை தவிர்த்து இந்திய அணியில் உள்ள 3 வீரர்கள் – யார் தெரியுமா?

Shardhul Thakur India Dhawan Shreyas Iyer
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியானது அங்கு நடைபெற்ற ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடர் என இரண்டையும் கைப்பற்றி அசத்திய வேளையில் அடுத்ததாக இம்மாத இறுதியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னர் வரும் மிகப்பெரிய தொடர் இந்த ஆசிய கோப்பை தொடர் என்பதனால் இந்த ஆசிய கோப்பையில் விளையாடும் வீரர்கள் தான் பெரும்பாலும் உலகக்கோப்பை அணியில் இடம் பெறுவார்கள்.

இதன் காரணமாக இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் தேர்வு மீது அனைவரது கவனமும் இருந்தது. அந்த வகையில் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியை நேற்று பி.சி.சி.ஐ தங்களது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது. அந்த பட்டியலில் :

- Advertisement -

ரோகித் சர்மா கேப்டனாகவும், துணை கேப்டனாக கே.எல் ராகுலும் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதோடு சமீபகாலமாகவே பார்ம் இன்றி தவித்து வரும் விராட் கோலி மீண்டும் அணியில் இணைந்துள்ளார். அதனை தவிர்த்து மொத்தமாகவே 15 வீரர்களை மட்டுமே இந்திய அணி எடுத்துள்ளதால் ஏகப்பட்ட வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போயுள்ளது.

தற்போது உள்ள இந்திய அணியில் ஏகப்பட்ட வீரர்கள் உள்ள நிலையில் எப்படி வீரர்களை தேர்வு செய்வது என்ற குழப்பமே இருந்தபோதும் விதிமுறைப்படி தற்போதைய சூழலில் சிறப்பாக விளையாடி வரும் வீரர்களையே தேர்வுகுழுவினர் தேர்ந்தெடுத்துள்ளனர். அந்த வகையில் ஆசிய கோப்பை தொடருக்கான அணியில் இருக்கும் 15 வீரர்களை தவிர்த்து மேலும் 3 வீரர்கள் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.

- Advertisement -

அப்படி அணியில் இருக்கும் இந்த கூடுதல் 3 வீரர்கள் முதன்மை அணியில் யாருக்கேனும் காயம் ஏற்பட்டாலோ அல்லது அவர்களால் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டாலோ அவர்களுக்கு பதிலாக பேக் அப் வீரர்களாக அணியில் இணைக்கப்பட்டுள்ளனர். அந்த 3 வீரர்கள் யாரெனில் மிடில்ஆர்டர் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயர், சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேல் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாகர் ஆகியோர்தான்.

இதையும் படிங்க : பெரிய பெயராக இருந்தாலும் தோனி சுமாரான விக்கெட் கீப்பர் தான் – ஆதாரத்துடன் பேசும் முன்னாள் பாக் வீரர்

ஆசிய கோப்பை தொடரின் போது அணியில் உள்ள ஏதேனும் வீரர்களுக்கு காயமோ அல்லது விளையாட முடியாத சூழலோ ஏற்பட்டால் அவர்களுக்கு பதிலாக stand by வீரர்களான இவர்கள் அணியில் இணைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement