பெரிய பெயராக இருந்தாலும் தோனி சுமாரான விக்கெட் கீப்பர் தான் – ஆதாரத்துடன் பேசும் முன்னாள் பாக் வீரர்

Dhoni
- Advertisement -

இந்தியாவின் நட்சத்திர முன்னாள் வீரர் எம்எஸ் தோனி வரலாறு கண்ட மிகச் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மற்றும் கேப்டனாக போற்றப்படுகிறார். ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த இவர் கடந்த 2004இல் சௌரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணியில் அறிமுகமாகி அதிரடியான பேட்டிங், அபாரமான விக்கெட் கீப்பிங் போன்ற அம்சங்களால் அப்போது முதல் ஓய்வு பெறும் வரை இந்தியாவின் நிரந்தர நம்பர் 1 விக்கெட் கீப்பராக விளையாடினார். 2007இல் கேப்டன்ஷிப் அனுபவமில்லாத போதிலும் தம்மிடம் வழங்கப்பட்ட பொறுப்பில் அனைத்து வீரர்களையும் அற்புதமாக வழிநடத்திய அவர் முதல் வருடத்திலேயே பரம எதிரியான பாகிஸ்தானை பைனலில் தோற்கடித்து டி20 உலகக் கோப்பையை வென்று காட்டினார்.

Dhoni

- Advertisement -

2010இல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது தலைமையில் நம்பர் ஒன் அணியாக முன்னேறிய இந்தியா 2011இல் சொந்த மண்ணில் நடந்த உலகக் கோப்பையில் அபாரமாக செயல்பட்டு 28 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வென்று சரித்திரம் படைத்தது. மேலும் 2013இல் தாம் உருவாக்கிய விராட் கோலி, ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா போன்ற வீரர்களை வைத்து இங்கிலாந்தில் நடந்த ஐசிசி சம்பியன்ஸ் டிராபியை வென்று காட்டிய அவர் தற்போதைய இந்திய அணியில் விளையாடும் பாதிக்கும் மேற்பட்ட வீரர்களை அப்போதே கண்டறிந்து வாய்ப்பளித்து வளர்த்து வளமான வருங்காலத்துக்கு வித்திட்டவர்.

மகத்தான கீப்பர்:
அப்படி பல பரிணாமங்களை கொண்ட எம்எஸ் தோனி தனது அதிரடியான பேட்டிங்கால் இந்திய விக்கெட் என்றால் வெறும் பந்து பிடித்து போடுபவர்களாக இல்லாமல் அதிரடியாக பேட்டிங் செய்ய வேண்டும் என்ற அடிப்படை இலக்கணத்தை மாற்றிய பெருமைக்குரியவர். சொல்லப்போனால் இந்திய கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பர்களை தோனிக்கு முன் பின் என 2 வகையாக பிரிக்கலாம். அந்தளவுக்கு மகத்தான அவர் விக்கெட் கீப்பிங் செய்வதில் கண்ணிமைக்கும் நேரத்தில் மின்னல் வேகத்தில் ஒருசில வினாடிகளில் ஸ்டம்பிங் செய்வது, பேட்ஸ்மேன்கள் 1 இன்ச் காலைத்தூக்கினால் ஸ்டம்ப்பிங் செய்வது போன்ற வரலாறு காணாத பரிணாமங்களை கிரிக்கெட்டிற்கு அறிமுகப்படுத்தியவர்.

MS Dhoni Stumping

அதேபோல் 2016 டி20 உலக கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் கடைசி பந்தில் ஒற்றை க்ளவுசை முன்கூட்டியே கழட்டிவிட்டு ரன் அவுட் செய்ததெல்லாம் காலத்துக்கும் மறக்க முடியாத மெய்சிலிர்க்கும் நிகழ்வாகும். சொல்லப்போனால் ஜாம்பவான்கள் ஆடம் கில்கிறிஸ்ட், குமார் சங்ககாரா ஆகியோரைக் காட்டிலும் அதிக ஸ்டம்பிங் செய்து உலக சாதனை படைத்துள்ள அவர் வரலாற்றில் மிகச் சிறந்த விக்கெட் கீப்பராக தன்னை நிரூபித்துள்ளார்.

- Advertisement -

சுமாரான கீப்பரே:
இப்படி ஏராளமான சாதனைகளை படைத்து பெரிய பெயரை வைத்திருந்தாலும் விக்கெட் கீப்பிங் செய்வதில் எம்எஸ் தோனி சுமாரானவர் தான் என்று முன்னாள் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் ரஷீத் லதீப் வித்தியாசமான கருத்தை கூறியுள்ளார். அதாவது விக்கெட் கீப்பராக நிறைய கேட்ச்களை தோனி தவற விட்டுள்ளதாக தெரிவிக்கும் அவர் ஆடம் கில்கிறிஸ்ட், மார்க் பவுச்சர் ஆகியோருடன் நவீன கிரிக்கெட்டில் குவின்டன் டீ காக் ஆகியோரே சிறந்த விக்கெட் கீப்பர்கள் என்று புள்ளி விவரப்படி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு.

latif

“தோனி ஒரு பேட்ஸ்மேன் கீப்பர் ஆவார். தோனி என்பவர் மிகப்பெரிய பெயரை கொண்டவர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவருடைய புள்ளி விவரங்களை நீங்கள் புரட்டும் போது 21% கேட்ச்களை தவற விட்டுள்ளார். அது மிகமிக பெரிய சொதப்பலாகும்” என்று கூறினார். அப்போது உங்களது புள்ளிவிவரங்களை சொல்லுமாறு நிகழ்ச்சி தொகுப்பாளர் எழுப்பிய கேள்விக்கு இந்த புள்ளிவிவரங்கள் 2002 முதல் கண்காணிக்கப்பட துவங்கப்பட்டதால் தன்னுடைய விக்கெட் கீப்பிங் புள்ளி விவரங்களை அறிய முடியவில்லை என்று தெரிவித்து மேலும் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இந்த விஷயத்தில் என்னுடைய புள்ளி விவரங்களைப் நீங்கள் பயன்படுத்த முடியாது ஏனெனில் அது 2002 அல்லது 2003இல் துவங்கப்பட்டது. அதற்கு முன்னதாகவே நாங்கள் விளையாடி முடித்து விட்டோம். இருப்பினும் இந்தப் புள்ளி விவபரத்தில் ஆடம் கில்கிறிஸ்ட் 11% மட்டுமே கொண்டுள்ளார். மார்க் பவுச்சரும் சிறந்த சதவீதத்தை கொண்டுள்ளார்”

இதையும் படிங்க : கிறிஸ் கெயிலையும் மிஞ்சிய கைரன் பொல்லார்ட் – டி20 கிரிக்கெட்டில் உலக அளவில் புதிய வரலாற்று சாதனை

“ஆஸ்திரேலியாவின் டிம் பைன் இந்த புள்ளி விவரத்தில் ஆரம்பத்தில் நல்ல வளர்ச்சி கண்டாலும் இறுதியில் நிறைய கேட்ச்களை தவறவிட்டார். கடந்த 15 வருடங்களில் நீங்கள் பார்க்கும் போது குவின்டன் டி காக் சூப்பரான விக்கெட் கீப்பர் என்று நான் கூறுவேன். அவர் 3 வகையான கிரிக்கெட்டிலும் விக்கெட் கீப்பிங் செய்து வெள்ளை பந்து கிரிக்கெட்டில் டாப் ஆர்டரில் சிறந்த பேட்ஸ்மேனாக செயல்பட்டு வருகிறார்” என்று பாராட்டினார். இருப்பினும் இவரின் இந்த கருத்தை இந்திய ரசிகர்கள் உருட்டாகவே பார்க்கிறார்கள்.

Advertisement