IND vs SL : இலங்கை அணிக்கெதிரான டி20 தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு – லிஸ்ட் இதோ

Hardik Pandya
- Advertisement -

அண்மையில் வங்கதேச நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியானது அங்கு நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடியது. பின்னர் தற்போது அந்த சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய அணியானது அடுத்ததாக இலங்கை அணிக்கெதிராக நடைபெறவுள்ள 3 போட்டிகள் டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க இருக்கிறது.

அதன்படி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணியானது இங்கு இந்திய அணிக்கெதிராக பலப்பரீட்சை நடத்த காத்திருக்கிறது. இந்நிலையில் இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக நடைபெறயிருக்கும் டி20 தொடருக்கான இந்திய அணியை தற்போது இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பி.சி.சி.ஐ தங்களது அதிகாரபூர்வமான டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது.

- Advertisement -

அதன்படி இந்த டி20 தொடருக்கான அணியிலும் ரோஹித் சர்மா காயம் காரணமாக விளையாடவில்லை. மேலும் விராட் கோலியும் இந்த டி20 தொடரில் ஓய்வு எடுத்துக்கொண்டுள்ளார். மேலும் ரிஷப் பண்ட், கே.எல் ராகுல் போன்ற வீரர்களும் இடம்பெறவில்லை. அதேபோன்று பும்ரா, ஷமி, ஜடேஜா ஆகியோரும் இடம்பெறவில்லை.

இதன்காரணமாக இந்த டி20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஹார்டிக் பாண்டியாவும், துணைக்கேப்டனாக சூரியகுமார் யாதவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த டி20 தொடரில் பல இளம்வீரர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. குறிப்பாக வாய்ப்புக்காக காத்திருக்கும் சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ராகுல் திரிபாதி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

- Advertisement -

அதேபோன்று பந்துவீச்சு துறையிலும் அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், ஹர்ஷல் படேல் போன்றோர் இடம்பிடித்துள்ளனர். மேலும் இதுவரை ஐ.பி.எல் போட்டிகளில் கூட விளையாடாத முகேஷ் குமார் என்கிற பந்துவீச்சாளரும் இந்த அணியில் இடம்பிடித்துள்ளார். அதன்படி இந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய வீரர்களின் பட்டியல் இதோ:

இதையும் படிங்க : விராட் கோலியை அலறவிட்ட பவுலருக்கு இப்படி ஒரு நிலையா? – ஐ.பி.எல் ஏலத்தில் விலைபோகாத அவலம்

1) ஹார்டிக் பாண்டியா, 2) சூரியகுமார் யாதவ், 3) இஷான் கிஷன், 4) ருதுராஜ் கெய்க்வாட், 5) சுப்மன் கில், 6) தீபக் ஹூடா, 7) ராகுல் திரிபாதி, 8) சஞ்சு சாம்சன், 9) வாஷிங்க்டன் சுந்தர், 10) யுஸ்வேந்திர சாகர், 11) அக்சர் படேல், 12) அர்ஷ்தீப் சிங், 13) ஹர்ஷல் படேல், 14) உம்ரான் மாலிக், 15) சிவம் மாவி, 16) முகேஷ் குமார்.

Advertisement