பெங்களூரு பிட்ச்ல இதை மட்டும் பண்ணா போதும் இந்திய அணி ஈஸியா ஜெயிச்சிடலாம் – விவரம் இதோ

Pitch
- Advertisement -

சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது மேத்யூ வேட் தலைமையிலான ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் நான்கு ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் இந்திய அணி மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி விட்டது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று டிசம்பர் 3-ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியானது இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது.

- Advertisement -

ஏற்கனவே இந்திய அணி இந்த தொடரினை கைப்பற்றி விட்டதால் நிச்சயம் இன்றைய போட்டியில் பல மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த பெங்களூரு மைதானத்தில் நடைபெறும் கடைசி போட்டியில் வெற்றி பெற இந்திய அணி டாசில் வெற்றி பெற்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விட்டாலே போதும் என்று கூறப்படுகிறது.

ஏனெனில் பெங்களூரு மைதானம் எப்போதுமே ஹைகோரிங் மைதானமாக இருந்திருக்கிறது. இங்கு அதிகமுறை 200-க்கும் மேற்பட்ட ரன்கள் டி20 போட்டிகளின் போது அடிக்கப்பட்டிருப்பதால் இரண்டு அணிகளின் பேட்ஸ்மேன்களுக்குமே இந்த மைதானம் ஒத்துழைக்கும்.

- Advertisement -

எனவே இந்திய அணி முதலில் டாஸ் வென்று பெரிய ஸ்கோரை அடித்து விட்டால் நிச்சயம் ஆஸ்திரேலியா அணியை அழுத்தத்திற்குள் கொண்டு வந்து வீழ்த்த முடியும். அதேபோன்று இந்திய மண்ணில் வெளிநாட்டு வீரர்கள் சேசிங் செய்யும் போது சில அழுத்தங்களை சந்திப்பார்கள். அந்த சூழலை நமக்கு சாதகமாக்கி சிறப்பாக பந்துவீசும் பட்சத்தில் எளிதாக அவர்களை வீழ்த்தி விடலாம் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : ஆஸி அணிக்கெதிரான இன்றைய 5 ஆவது போட்டியில் கேப்டன் மாற்றம் நடைபெற வாய்ப்பு – காரணம் இதோ

எனவே இன்றைய போட்டியில் டாஸ் வெற்றி பெறும் அணி எதுவாக இருந்தாலும் முதலில் பேட்டிங் செய்யவே விருப்பப்படும். அதோடு நிச்சயம் இன்றைய போட்டியில் நிறைய சிக்சர்களை எதிர்பார்க்கலாம் என்றும் பிட்ச் ரிப்போர்ட் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement