அரையிறுதியில் தோல்வி அடைந்து வெளியேறிய இந்திய அணிக்கு கிடைத்த பரிசுத்தொகை – எவ்வளவு தெரியுமா?

IND
Advertisement

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பையில் நேற்று முன்தினம் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் அடிலெயிடு மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய இந்திய அணியானது இங்கிலாந்து அணிக்கு எதிராக படுமோசமான தோல்வியை சந்தித்து இந்த தொடரில் இருந்து வெளியேறியது. இந்த உலகக் கோப்பை தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னர் கோப்பையை வென்று சாம்பியன் பட்டம் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி இப்படி அரையிறுதி போட்டியோடு வெளியேறியது பலரது மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Virat Kohli Suryakumar Yadav.jpeg

ஏற்கனவே கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தவறவிட்ட இந்திய அணியானது இம்முறையாவது கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இந்த முறையும் இந்திய அணி ஏமாற்றத்தை அளித்துள்ளதால் தற்போது இந்திய அணியின் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

- Advertisement -

இந்நிலையில் அரையிறுதி வரை வந்து வெளியேறிய இந்திய அணிக்கு கிடைக்கப்போகும் பரிசு தொகை எவ்வளவு என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி ஏற்கனவே ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி : இந்த டி20 உலக கோப்பையை வெல்லும் அணிக்கு 1.6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசு தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. அந்த வகையில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு இந்திய மதிப்பில் சுமார் 13 கோடி ரூபாய் பரிசுத்தொகையாக கிடைக்கவுள்ளது.

IND vs ZIM Hardik Pandya Bhuvneswar Kumar Rohit Sharma

இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 8 லட்சம் அமெரிக்க டாலரும், அரையிறுதியில் தோல்வியடைந்து வெளியேறும் இரு அணிகளுக்கும் தலா நாலு லட்சம் அமெரிக்க டாலரும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் அரையிறுதியில் தோல்வி அடைந்த இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இந்திய மதிப்பில் தலா 3.22 கோடி ரூபாய் பரிசு தொகையாக கிடைக்கும்.

- Advertisement -

மேலும் ஒவ்வொரு போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு 40 ஆயிரம் அமெரிக்க டாலர் வழங்கப்படும். அதன்படி சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி நான்கு வெற்றிகளை பெற்றதால் அதற்கு 1 கோடியே 28 லட்சம் தனியாக கிடைக்கும் என்பதனால் இந்த தொடரில் மொத்தம் இந்திய அணிக்கு 4 கோடியே 50 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : டி20 உலக கோப்பை வரலாற்றில் பைனல்களில் ஆட்டநாயகன் விருது வென்ற வீரர்களின் பட்டியல்

அதோடு இந்த தொடரின் மொத்த பரிசு தொகையாக 5.6 மில்லியன் டாலராக உள்ளது. இந்திய மதிப்பில் சுமார் 45 கோடி வரை இந்த தொடரின் மொத்த பரிசுத்தொகை இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement