டி20 உலக கோப்பை வரலாற்றில் பைனல்களில் ஆட்டநாயகன் விருது வென்ற வீரர்களின் பட்டியல்

Pathan-3
- Advertisement -

சர்வதேச டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் அசத்திய பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் வரும் நவம்பர் 13ஆம் தேதியன்று மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் மாபெரும் ஃபைனலில் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்துகின்றன. அதில் அபாரமாக செயல்பட்டு தங்களது நாட்டுக்கு கோப்பையை வென்று பெருமை சேர்க்க இரு அணிகளிலும் உள்ள ஒவ்வொரு வீரரும் கடைசி முயற்சியாக முழுமூச்சுடன் உயிரை கொடுத்து போராட தயாராகியுள்ளனர்.

ஆனால் கிரிக்கெட்டில் அனைத்து வீரர்களுக்கும் சாதாரண இருதரப்பு போட்டியில் விளையாடுவதை விட ஐசிசி உலகக் கோப்பையின் லீக் போட்டியில் விளையாடுவது மிகவும் கடினமாகும். அதில் அசத்தலாக செயல்பட்டு தோற்றால் வெளியேற வேண்டும் என்ற நிலைமையை கொண்ட நாக் அவுட் போட்டியில் அசத்துவது அதை விட கடினமாகும். அப்படி லீக் மற்றும் நாக் அவுட் போட்டியிலேயே கொஞ்சம் தவறினாலும் வெற்றி பறி போய்விடும் என்று அழுத்தத்தில் சிறப்பாக செயல்படுவது ஒவ்வொரு வீரருக்கும் கடினமானது என்ற நிலைமையில் ஃபைனலில் சிறப்பாக செயல்படுவது மும்மடங்கு சவாலாகும்.

- Advertisement -

பைனலின் நாயகன்கள்:
ஏனெனில் அதில் ஒட்டுமொத்த உலகின் எதிர்பார்ப்பும் மைதானத்தில் இருக்கும் அதிகப்படியான ரசிகர்களின் எதிர்பார்ப்பும் தனித்துவமான அழுத்தத்தை ஏற்படுத்தும், அத்துடன் தோற்றால் அதுவரை உழைத்த உழைப்பு மண்ணாகி விடும் என்ற எக்ஸ்ட்ரா அழுத்தம் இருக்கும். எனவே அதை சமாளித்து டி20 உலக கோப்பை வரலாற்றில் பைனலில் ஆட்டநாயகன் விருதுகளை வென்ற வீரர்களை பற்றி பார்ப்போம்:

1. இர்பான் பதான்: வரலாற்றில் முதல் முறையாக தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 2007 டி20 உலக கோப்பையில் எம்எஸ் தோனி தலைமையில் அபாரமாக செயல்பட்ட இந்தியா பைனலில் பரம எதிரி பாகிஸ்தானை மிஸ்பா-உல்-ஹக் போராட்டத்தையும் தாண்டி வெறும் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது.

- Advertisement -

ஜொகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் பேட்டிங்கில் கௌதம் கம்பீர் 75 (54) ரன்கள் எடுத்தாலும் பந்து வீச்சில் சோயப் மாலிக் 8, ஷாஹித் அப்ரிடி 0, யாசிர் அர்பாட் 15 என 3 முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை எடுத்து திருப்பு முனையை ஏற்படுத்திய இவர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

2. ஷாஹித் அப்ரிடி: 2007 உலகக் கோப்பையில் விட்டதை இங்கிலாந்தில் நடைபெற்ற 2வது உலக கோப்பையில் இலங்கை வீழ்த்தி பிடித்த பாகிஸ்தான் முதல் கோப்பையை வென்று சாதனை படைத்தது. குறிப்பாக இலங்கை நிர்ணயித்த 139 ரன்களை துரத்திய பாகிஸ்தானுக்கு 54* (40) ரன்களையும் 1 விக்கெட்டும் எடுத்த இவர் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

3. க்ரைக் கீஸ்வெட்டர்: 2010இல் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற உலகக் கோப்பையில் பரம எதிரி ஆஸ்திரேலியா நிர்ணயித்த 148 ரன்களை அசால்டாக சேசிங் செய்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து முதல் கோப்பையை வென்றது. அதில் தொடக்க வீரராக களமிறங்கி அதிரடியாக 63 (49) ரன்களை குவித்த இவர் ஆட்டநாயகன் விருது வென்றார்.

4. மர்லான் சாமுவேல்ஸ்: 2012 டி20 உலகக் கோப்பையில் இலங்கையை அதன் சொந்த மண்ணில் ஃபைனலில் 138 ரன்களை துரத்த விடாமல் 101 ரன்களுக்கு சுருட்டிய வெஸ்ட் இண்டீஸ் முதல் கோப்பையை வென்று அசத்தியது. அப்போட்டியில் தனி ஒருவனாக 78 (56) ரன்களை குவித்த இவர் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

5. குமார் சங்ககாரா: 2014இல் வங்கதேசத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் பைனலில் விராட் கோலியின் 77 (57) ரன்கள் போராட்டத்தையும் தாண்டி இந்தியா நிர்ணயித்த வெறும் 131 ரன்களை துரத்திய இலங்கைக்கு 52* (35) ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவிய இவர் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

6. மர்லான் சாமுவேல்ஸ்: 2016இல் இந்திய மண்ணில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற பைனலில் இங்கிலாந்து நிர்ணயித்த 156 ரன்களை துரத்திய வெஸ்ட் இண்டீசுக்கு கடைசியில் 4 சிக்ஸர்களை பறக்க விட்டு 34* (10) ரன்கள் குவித்த கார்லஸ் ப்ரத்வெயிட் வெற்றி பெற வைத்ததை யாராலும் மறக்க முடியாது.

ஆனால் மறுபுறம் நங்கூரமாக 85* (66) ரன்கள் குவித்து வெற்றிக்கு அடித்தளமிட்ட இவர் 2012 போல மீண்டும் அபாரமாக செயல்பட்டு 2வது உலக கோப்பையை வெல்ல 2வது ஆட்டநாயகன் விருதை வென்று கருப்பு குதிரையாக திகழ்ந்தார்.

7. மிட்சேல் மார்ஷ்: கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் நியூசிலாந்து நிர்ணயித்த 173 ரன்கள் இலக்கை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு 77* (50) ரன்கள் குவித்து முதல் டி20 உலக கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய இவர் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

Advertisement