INDvsWI : இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ – அணியில் மாற்றம்

IND
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது தற்போது அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கடந்த 6-ஆம் தேதி நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபாரமாக வீழ்த்தி 1 க்கு 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

Cup

- Advertisement -

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று மதியம் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் தொடரை கைப்பற்றும் என்பதனால் இந்திய அணிக்கு இது ஒரு முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது. அதே வேளையில் இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை கைப்பற்றும் வாய்ப்பில் நீடிக்க முடியும் என்பதால் அந்த அணியும் இன்றைய போட்டியில் வெற்றிக்காக போராடும்.

எனவே இந்த போட்டி ரசிகர்களுக்கு மிகவும் சுவாரசியத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இந்நிலையில் இந்த தொடரின் முதல் ஒருநாள் போட்டியின் போது தனது சகோதரி திருமணத்திற்காக விடுப்பு எடுத்திருந்ததால் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ள ராகுல் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இன்று விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Rahul-1

அப்படி ராகுல் விளையாடும் பட்சத்தில் இந்திய அணியிலிருந்து நிச்சயம் ஏதாவது ஒரு வீரர் வெளியேறியாக வேண்டும். அந்த வகையில் துணை கேப்டனான ராகுல் இன்றைய போட்டியில் துவக்க வீரராக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அவர் துவக்க வீரராக களமிறங்கும் பட்சத்தில் இஷான் கிஷன் அணியில் இருந்து வெளியேற்றப்படுவார் என்று தெரிகிறது.

- Advertisement -

கடந்த போட்டியில் அறிமுகமான தீபக் ஹூடா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றதால் மீண்டும் அவருக்கு பின் வரிசையில் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்கிற காரணத்தினால் ராகுல் தொடக்க வீரராக களமிறங்குவார் என்று தெரிகிறது. இந்த ஒரு மாற்றத்தை தவிர்த்து இந்திய அணியில் வேறு எந்த மாற்றமும் இருக்காது. இன்றைய போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : என்ன வேணும்னா 6 பவுலரா யூஸ் பண்ணிக்கோங்க. நான் ரெடியா இருக்கேன் – இந்திய அதிரடி வீரர் பேட்டி

1) ரோஹித் சர்மா, 2) கே.எல் ராகுல், 3) விராட் கோலி, 4) ரிஷப் பண்ட், 5) சூர்யகுமார் யாதவ், 6) தீபக் ஹூடா, 7) வாசிங்டன் சுந்தர், 8) ஷர்துல் தாகூர், 9) முகமது சிராஜ், 10) யுஸ்வேந்திர சாஹல், 11) பிரசீத் கிருஷ்ணா.

Advertisement