என்ன வேணும்னா 6 பவுலரா யூஸ் பண்ணிக்கோங்க. நான் ரெடியா இருக்கேன் – இந்திய அதிரடி வீரர் பேட்டி

ind
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது தற்போது அகமதாபாத் நகரில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற இருக்கின்றது.

SKY

- Advertisement -

இந்நிலையில் கடந்த போட்டியின் போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆறாவது பவுலரை பயன்படுத்தாதது பெரிய அளவில் விமர்சனத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் எப்போதுமே இந்திய அணியில் சிக்கலாக இருக்கும் இடமாக அந்த ஆறாவது பவுலரின் இடம்தான் பார்க்கப்படுகிறது.

ஹார்டிக் பாண்டியா காயமடைந்து பந்து வீசாமல் இருந்து வருவதிலிருந்து இந்த பிரச்சனை இந்திய அணிக்கு தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் தற்போது இந்திய அணியின் அதிரடி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான 36 வயதான சூர்யகுமார் யாதவ் இரண்டாவது போட்டிக்கு முன்னர் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். அதில் அவர் தான் 6-வது பவுலராக இந்திய அணியில் செயல்பட தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : என்னால் பந்துவீச்சிலும் நிச்சயம் பங்களிப்பை அளிக்க முடியும். நான் எப்போதெல்லாம் பந்துவீசும் வாய்ப்பை பெறுகின்றேனோ அப்போதெல்லாம் பந்துவீச தயாராக இருக்கிறேன். ஏனெனில் நான் வலைப்பயிற்சியில் பந்து வீசியும் பயிற்சி செய்வதால் நிச்சயம் என்னை அணி நிர்வாகம் பந்துவீச அழைக்கும் பட்சத்தில் நான் ஆறாவது பவுலராக பந்துவீச தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

இதுவரை இந்திய அணிக்காக சூர்யகுமார் யாதவ் 11 டி20 போட்டிகளில் விளையாடி 244 ரன்களையும், ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடி 197 ரன்களையும் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயித்த 177 ரன்கள் என்ற இலக்கை துரத்தும்போது 4 விக்கெட் விழுந்த பின்னர் சூர்யகுமார் யாதவ் மற்றும் தீபக் ஹூடா சிறப்பான பாட்னர்ஷிப் அமைத்தனர்.

இதையும் படிங்க : மைக்கல் பெவனுடன் ஒப்பிட்ட பத்திரிகையாளர். சூரியகுமார் யாதவ் கொடுத்த பதிலடி – விவரம் இதோ

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சூர்யகுமார் யாதவ் 36 பந்துகளை சந்தித்த வேளையில் 4 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. அதோடு தீபக் ஹூடாவுடன் இணைந்து 62 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றிக்கும் அழைத்துச்சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement