INDvsNZ : இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச அணி இதோ

IND-vs-NZ
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது தற்போது நியூசிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே நேற்று நடைபெற்று முடிந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய நியூசிலாந்து அணியானது இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

IND vs NZ 1

- Advertisement -

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது நாளை நவம்பர் 27-ஆம் தேதி ஹாமில்டன் நகரில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த இரண்டாவது போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஏதாவது மாற்றம் இருக்குமா என்பது ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. அதன்படி நாளைய போட்டியில் இந்திய அணியில் பெரிய அளவில் மாற்றம் இல்லை என்றாலும் ஒரு மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

அந்த வகையில் கடந்த போட்டியில் முதல் 6-7 ஓவர்கள் சிறப்பாக பந்து வீசி இருந்தாலும் இறுதியில் மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஷர்துல் தாகூர் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக தீபக் சாகர் அணியில் சேர்க்கப்படுவார் என்று தெரிகிறது. அவரை தவிர்த்து இந்திய அணியில் வேறு ஏதும் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்று கூறப்படுகிறது. எனவே நாளை போட்டியில் துவக்க வீரர்களாக ஷிகார் தவான் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் விளையாடுவது உறுதி.

Shardul-Thakur

அதோடு டாப் ஆர்டரில் ஷ்ரேயாஸ் ஐயர் மூன்றாவது இடத்திலும், சூரியகுமார் யாதவ் நான்காவது இடத்திலும், ரிஷப் பண்ட் ஐந்தாவது இடத்திலும், ஆறாவது இடத்தில் சஞ்சு சாம்சனும் இறங்குவார்கள். அதனை தவிர்த்து இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களாக யுஸ்வேந்திர சாஹல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம் பெறுவது உறுதி.

- Advertisement -

மற்றபடி வேகப்பந்து வீச்சாளர்களாக அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக் ஆகிய இருவரோடு சேர்ந்து தீபக் சாகர் அணியில் இணைய அதிக வாய்ப்புள்ளது. அதனை தவிர்த்து இந்திய அணியில் பெரிதாக வேறு ஏதும் மாற்றம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் நாளைய இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் உத்தேச பட்டியல் இதோ :

இதையும் படிங்க : IND vs NZ : முதல் போட்டியில் தடுமாறிய ஷார்துல் தாகூருக்கு பதிலாக அவருக்கு சான்ஸ் கொடுங்க – ரசிகர்கள் சரியான கோரிக்கை

1) ஷிகார் தவான், 2) சுப்மன் கில், 3) ஷ்ரேயாஸ் ஐயர், 4) சூரியகுமார் யாதவ், 5) ரிஷப் பண்ட், 6) சஞ்சு சாம்சன், 7) வாஷிங்க்டன் சுந்தர், 8) தீபக் சாகர், 9) அர்ஷ்தீப் சிங், 10) உம்ரான் மாலிக், 11) யுஸ்வேந்திர சாஹல்

Advertisement