இங்கிலாந்துக்கு எதிரான நாளைய 3 ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

IND-vs-ENG
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே இந்த தொடரில் நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று இந்த தொடரில் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலை வகிக்கின்றன. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது பிப்ரவரி 15-ஆம் தேதி நாளை ராஜ்கோட் நகரில் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் நாளைய இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்களுக்கு இடம் கிடைக்கும்? என்கிற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. ஏனெனில் ஏற்கனவே இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் பலர் காயம் காரணமாகவும், சிலர் தனிப்பட்ட விடயங்கள் காரணமாகவும் வெளியேறியுள்ளனர்.

- Advertisement -

இவ்வேளையில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் எவ்வாறு அமையப்போகிறது என்பது குறித்த எதிர்பார்ப்பும் அனைவரது மத்தியில் எழுந்துள்ளது. ஏனெனில் காயம் காரணமாக மூன்றாவது போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் விளையாடாத வேளையில் கே.எல் ராகுலும் மூன்றாவது போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

இதன் காரணமாக நிச்சயம் மிடில் ஆர்டரில் அனுபவம் மற்ற புதிய வீரர்களே விளையாட இருக்கின்றனர். அந்த வகையில் நாளைய மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்கள் இடம்பிடிப்பார்கள்? என்பது குறித்த கணிப்பை நாங்கள் இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம். அந்த வகையில் துவக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் விளையாடுவார்கள். அவர்களை தொடர்ந்து மூன்றாவது வீரராக சுப்மன் கில்லும், நான்காவது வீரராக ரஜத் பட்டிதாரும் விளையாடுவார்கள்.

- Advertisement -

ஐந்தாவது இடத்தில் சர்பராஸ் கான் அறிமுகமாக வாய்ப்பு உள்ளது. அதேபோன்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக துருவ் ஜூரேல் அறிமுகமாக வாய்ப்பு உள்ளது. 7, 8, 9 ஆகிய இடங்களில் சுழற்பந்து வீச்சாளர்களாக ஜடேஜா, அஸ்வின், அக்சர் படேல் ஆகியோர் விளையாட வாய்ப்பு உள்ளது. இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களாக பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோர் இடம் பெறுவார்கள் என்று தெரிகிறது. அந்த வகையில் நாளைய இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : உலகின் சிறந்த ப்ளேயர்னு 10 டைம் சொல்வேன்.. அவரை பற்றி ஆண்டர்சனும் நானும் பேசினோம்.. ராபின்சன் வியப்பு

1) ரோஹித் சர்மா, 2) யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 3) சுப்மன் கில், 4) ரஜத் பட்டிதார், 5) சர்பராஸ் கான், 6) துருவ் ஜுரேல், 7) ரவீந்திர ஜடேஜா, 8) அக்சர் படேல், 9) ரவிச்சந்திரன் அஷ்வின், 10) ஜஸ்ப்ரீத் பும்ரா, 11) முகமது சிராஜ்.

Advertisement