உலகின் சிறந்த ப்ளேயர்னு 10 டைம் சொல்வேன்.. அவரை பற்றி ஆண்டர்சனும் நானும் பேசினோம்.. ராபின்சன் வியப்பு

Ollie Robinson
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதில் முதல் போட்டியில் தோல்வியை கொடுத்த இங்கிலாந்தை இரண்டாவது போட்டியில் வீழ்த்திய இந்தியா 1 – 1* என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது. குறிப்பாக இரண்டாவது போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதற்கு ஜஸ்பிரித் பும்ரா 9 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் ஃபிளாட்டான பிட்ச்சில் சிறப்பாக பந்து வீசிய பும்ரா முதல் போட்டியில் 196 ரன்கள் குவித்து தோல்வியை கொடுத்த ஓலி போப்பின் 3 ஸ்டம்ப்புகளையும் துல்லியமான யார்க்கர் பந்தால் பறக்க விட்டார். அதே போல அவருடைய துல்லியமான வேகத்தில் க்ளீன் போல்ட்டான பென் ஸ்டோக்ஸ் “இப்படிப்பட்டால் எப்படி அடிக்கிறது” என்ற வகையில் நிராயுதபாணியாக நின்று கொடுத்த ரியாக்சன் சமூக வலைதளங்களில் வைரலானது.

- Advertisement -

10 மடங்கு சொல்வேன்:
அப்படி அசத்தலாக செயல்பட்ட பும்ரா ஐசிசி டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்த முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற மாபெரும் சாதனையும் படைத்துள்ளார். இந்நிலையில் விசாகப்பட்டினத்தில் நடந்த போட்டியில் உலகின் சிறந்த பந்து வீச்சாளர் போல பும்ரா செயல்பட்டதாக 10 முறை சொல்வேன் என்று இங்கிலாந்து வீரர் ஓலி ராபின்சன் கூறியுள்ளார்.

மேலும் அவருடைய திறமையைப் பற்றி தாமும் ஜேம்ஸ் ஆண்டர்சனும் நிறைய விவாதித்ததாகவும் தெரிவிக்கும் ராபின்சன் இது பற்றி விஸ்டன் இணையத்தில் பேசியது பின்வருமாறு. “ஜஸ்பிரித் பும்ரா பைத்தியம் பிடித்தவர். இவர் உலகின் சிறந்த பந்து வீச்சாளர் என்று விசாகப்பட்டினத்தில் 10 முறை நான் சொல்லியிருக்க வேண்டும். குறிப்பாக ஓலி போப்பை அவுட்டாக்கிய விதத்தைப் பார்த்து இவர் ஏதோ நகைச்சுவை செய்கிறார் என்று எனக்கு தோன்றியது”

- Advertisement -

“பின்னர் பென் ஃபோக்ஸை மெதுவான பந்தில் அவுட்டாக்கிய போது இவர் இதை விட சிறப்பாக செயல்பட முடியுமா? என்று நினைத்தேன். அவரை பார்க்கும் போது வாவ். இந்த அற்புதமான பவுலரால் இன்னும் ஏதாவது செய்ய முடியுமா? என்று எனக்கு தோன்றுகிறது. ஒரு பவுலராக நானும் ஆண்டர்சனும் அவரைப் பற்றி கடந்த போட்டியில் பேசினோம். இந்தியாவில் பும்ரா விளையாடுவதை பார்ப்பது சிறப்பு வாய்ந்தது”

இதையும் படிங்க: ஏற்கனவே நிறைய அழுத்தம் இருக்கு.. இதுல இது வேறயா.. ரோஹித் நீக்கப்பட்டது பற்றி கவாஸ்கர் கருத்து

“ஏனெனில் இந்திய சூழ்நிலைகளில் அது போன்ற செயல்பாடுகளைத் தான் நாங்கள் வெளிப்படுத்த முயற்சிக்கிறோம். பும்ராவுக்கு நன்றி. அவர் அசாதாரணமானவர். இங்கே நான் எப்படி பந்து வீச வேண்டும் என்பதற்கு தேவையான குறிப்புகளை அவர் எனக்கு கொடுத்துள்ளார்” என்று கூறினார். மேலும் டி20 கிரிக்கெட்டில் அசத்துவதற்கு தேவையான யுக்திகளை டெஸ்ட் கிரிக்கெட்டில் பும்ரா பயன்படுத்தி வெற்றி காண்பதை தாமும் பின்பற்ற உள்ளதாக ராபின்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement