ஏற்கனவே நிறைய அழுத்தம் இருக்கு.. இதுல இது வேறயா.. ரோஹித் நீக்கப்பட்டது பற்றி கவாஸ்கர் கருத்து

Sunil Gavaskar 4
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நீக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா நியமனம் செய்யப்பட்டுள்ளார். சச்சின் டெண்டுல்கர் தலைமையில் ஒரு கோப்பையை வெல்வதற்கே தடுமாறி வந்த மும்பையின் கேப்டனாக 2013 சீசனில் பொறுப்பேற்ற ரோஹித் சர்மா முதல் வருடத்திலேயே சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தார்.

அதன் பின் குறுகிய காலத்திலேயே 5 கோப்பைகளை வென்ற அவர் மும்பை இன்று வெற்றிகரமான ஐபிஎல் அணியாக ஜொலிப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தார். இருப்பினும் சமீப காலங்களாகவே டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாட முடியாமல் ரோகித் சர்மா தடுமாறி வருகிறார். எனவே வருங்காலத்தை கருத்தில் கொண்டு 36 வயதாகும் அவரை கழற்றி விட்டுள்ள மும்பை ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக நியமித்துள்ளது.

- Advertisement -

கவாஸ்கர் வரவேற்பு:
மறுபுறம் மும்பை அணியில் ரோஹித் சர்மா தலைமையில் வளர்ந்து இந்திய அணியில் சிறந்த ஆல் ரவுண்டராக வீரராக வலம் வரும் ஹர்திக் பாண்டியா குஜராத் அணிக்கு முதல் வருடத்திலேயே கோப்பையை வென்று கொடுத்த அனுபவத்தை கொண்டுள்ளார். அதன் காரணமாக ரோகித் சர்மாவுக்கு பதிலாக அவரை மும்பை தங்களது அணியின் கேப்டனாக அறிவித்துள்ளது.

ஆனாலும் அதை விரும்பாத பெரும்பாலான மும்பை ரசிகர்களில் 6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் ஒரே நாளில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த அணியை பின்தொடர்வதை நிறுத்தி எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் ஏற்கனவே இந்திய அணிக்காக 3 வகையான கிரிக்கெட்டிலும் கேப்டனாக செயல்படுவதால் ரோஹித் சர்மா நிறைய அழுத்தத்தை சந்திப்பதாக சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

- Advertisement -

எனவே இந்த முடிவு 36 வயதாகும் ரோகித் சர்மா குறைந்தபட்சம் ஐபிஎல் தொடரில் கேப்டனாக இருப்பதால் ஏற்படும் அழுத்தத்திலிருந்து விடுபட்டு சிறப்பாக செயல்பட வழி வகுக்கும் என்று கவாஸ்கர் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஐபிஎல் அணிகள் எப்போதும் தங்களுடைய வருங்காலத்தையே பார்ப்பார்கள். ஏற்கனவே 36 வயதை கடந்துள்ள ரோகித் சர்மா இந்தியாவுக்காக மூன்று விதமான கிரிக்கெட்டிலும் கேப்டனாக இருப்பதால் நிறைய அழுத்தத்தை சந்திக்கிறார்”

இதையும் படிங்க: 3 போட்டிகளில் 490 ரன்கள் தேவை.. இந்த தொடரிலேயே சாதிப்பாரா? ஹிட்மேன் ரோஹித் சர்மா – விவரம் இதோ

“எனவே மும்பை நிர்வாகம் அவருடைய அழுத்தத்தை கொஞ்சம் குறைத்து ஹர்திக் பாண்டியாவின் தோளில் பொறுப்பை ஒப்படைக்க முயற்சித்துள்ளனர். பாண்டியா கேப்டனாக செயல்படுவது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நன்மையை ஏற்படுத்தும். இது ரோகித் சர்மா டாப் ஆர்டரில் சுதந்திரமாக விளையாடுவதற்கான வழியையும் உண்டாக்கும். ஹர்திக் பாண்டியா 3 அல்லது 5 ஆகிய இடங்களில் களமிறங்கி தன்னுடைய அணி தொடர்ச்சியாக 200 ரன்கள் குவிப்பதற்கு உதவலாம்” என்று கூறினார்.

Advertisement