IND vs AUS : இன்றைய மூன்றாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

KL Rahul Virat Kohli Matthew Wade Hardik Pandya
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே செப்டம்பர் 20-ஆம் தேதி மொஹாலி மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அதன் காரணமாக இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது.

INDvsAUS

- Advertisement -

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையே செப்டம்பர் 23-ஆம் தேதி நாக்பூர் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி தொடரை ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலை செய்துள்ளது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று செப்டம்பர் 25-ஆம் தேதி ஹைதராபாத் நகரில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஏதேனும் மாற்றம் இருக்குமா என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. அது குறித்த உத்தேச அணியை தான் நாம் இந்த பதிவில் காண உள்ளோம். அதன்படி இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் பேட்டிங் வரிசையில் பெரிதாக மாற்றம் இருக்காது என்று கூறப்படுகிறது.

Mathew Wade

அதேவேளையில் கடந்த போட்டியில் விளையாடிய ரிஷப் பண்ட் மீண்டும் அணியில் இருந்து நீக்கப்படுவார் என்று தெரிகிறது. அவரை தவிர்த்து பந்துவீச்சு துறையில் சில மாற்றங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதன்படி கடந்த போட்டியில் விளையாடாத புவனேஸ்வர் குமார் அணிக்கு திரும்ப வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

அதனை தவிர்த்து கடந்த போட்டியில் பந்துவீச்சில் சொதப்பிய ஹர்ஷல் பட்டேலுக்கு பதிலாக தீபக் சாகர் இடம்பெற வாய்ப்புள்ளது என்று தெரிகிறது. அதேபோன்று யுஸ்வேந்திர சாஹலுக்கு பதிலாக அஷ்வின் இடம்பெற வாய்ப்புள்ளது. அதன்படி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : டீம் இருக்குற வெயிட்ட பாத்தா இந்த அணி தான் டி20 வேர்ல்டுகப்ப ஜெயிக்கனும் – முகமது கைப் கருத்து

1) ரோஹித் சர்மா, 2) கே.எல் ராகுல், 3) விராட் கோலி, 4) சூரியகுமார் யாதவ், 5) ஹார்டிக் பாண்டியா, 6) தினேஷ் கார்த்திக், 7) அக்சர் படேல், 8) புவனேஷ்வர் குமார், 9) தீபக் சாகர், 10) பும்ரா, 11) யுஸ்வேந்திர சாஹல் / அஷ்வின்.

Advertisement