டீம் இருக்குற வெயிட்ட பாத்தா இந்த அணி தான் டி20 வேர்ல்டுகப்ப ஜெயிக்கனும் – முகமது கைப் கருத்து

Kaif
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் அக்டோபர் 16-ஆம் தேதி துவங்கும் டி20 உலக கோப்பை தொடரானது நவம்பர் 13-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. மொத்தம் 16 நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்க இருக்கும் இந்த தொடரானது ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும் இந்த டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்க இருக்கும் அனைத்து அணிகளும் தங்களது அணி வீரர்களின் பட்டியலை வெளியிட்டு விட்டதை அடுத்து எந்த அணி கோப்பையை கைப்பற்றும் என்கிற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

KL Rahul Virat Kohli Matthew Wade Hardik Pandya

- Advertisement -

அதோடு எந்த இரு அணிகள் இறுதிப் போட்டிக்கு செல்லும்? எந்தெந்த வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள்? என்பது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது கைஃப் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் : இந்திய அணி இந்த உலகக் கோப்பை கைப்பற்ற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் : இந்திய அணியை தற்போது பார்க்கையில் ஒரு நல்ல வலுவான அணியை கொண்டிருக்கிறது. மேலும் முக்கிய வீரர்கள் தற்போது மீண்டும் பார்மிற்கு திரும்பி உள்ளது இந்திய அணியின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. இந்த டி20 உலகக் கோப்பையை இந்தியா வெற்றி பெற வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.

IND Japrit Bumrah

அந்த வகையில் இந்திய அணி தற்போது பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சம பலத்தை கொண்டுள்ளது. அதன் காரணமாக ஆஸ்திரேலிய மைதானங்களிலும் நம்மால் சிறப்பாக விளையாட முடியும் என்ற நம்பிக்கையும் உள்ளது. நிச்சயம் இம்முறை இந்திய அணி கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்பதே தன்னுடைய விருப்பம் என முகமது கைப் கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் :

- Advertisement -

ஐசிசி கொண்டு வந்துள்ள ஸ்லோ ஓவர் ரேட் விதி மிகவும் சிக்கலானது மற்றும் கடினமானது என்று கூறியுள்ளார். இது குறித்த அவர் கூறுகையில் : இது போன்ற விதிமுறைகள் சில காலத்திற்கு முன்னதாகவே செயல்படுத்தப்பட்டது. ஆனால் அது வெற்றிகரமாக பின்பற்றப்படவில்லை. எனவே இந்த ஸ்லோ ஓவர் ரேட் விதிமுறைகளை கொஞ்சம் எளிமைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படிங்க : அன்றைய நாளில் சீட்டிங் பண்ணது தப்புதான் – 17 வருடங்கள் கழித்து தவறை ஓப்பனாக ஒப்புகொண்ட அப்ரிடி, முழுவிவரம்

அதோடு ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணியின் சிறந்த பிளேயிங் லெவனை இந்திய அணியால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனாலும் ரோகித் சர்மா ஒரு மிகச்சிறந்த கேப்டன் அவர் உலகக் கோப்பை அணியை மிகச் சிறப்பாக தேர்வு செய்து விளையாட வைப்பார் என அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement